ஒரு முறை கொரோனா தொற்றினால் குறைந்தது 6 மாதம் மீண்டும் தொற்று வராது-ஒக்ஸ்போர்ட் ஆராச்சியாளர்கள்

2 weeks

கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவருக்கு குறைந்தது 6 மாதங்களுக்கு மீண்டும் ஒரு முறை வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன.

பிரித்தானியாவின் சுகாதார பராமரிப்பு தொழிலாளர்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வின் பிரகாரம் முதலாவது தொற்று ஏற்பட்டு குறைந்தது 6 மாதங்களுக்கு மீண்டும் ஒரு முறை கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புக்கள் இல்லை என ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் தொடக்கம் நவம்பர் வரையான காலப்பகுதியில் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் ஏனைய மருத்துவ விஞ்ஞானிகளால் இது உறுதி செய்யப்படுவதற்கு முன்னர் குறித்த முடிவுகள் இணையத்தில் வெளியி;டப்பட்டுள்ளன.

உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள 51 மில்லியன்களுக்கும் அதிகமான மக்களுக்கு மீண்டும் ஒரு முறை 6 மாதங்களுக்குள் தொற்று ஏற்படாது என்ற உறுதி மொழியை வழங்குவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஓக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ள முடிவுகளை வரவேற்பதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் சிரேஸ்ட அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மனிதர்களின் நோயெதிர்ப்பு சக்தியின் நிலையான மட்டத்தை இதன் மூலம் அவதானிப்பதுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசி மூலம் நன்மைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையை குறித்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது எனவும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் குறித்த ஆய்வுக்கு உட்பட்டவர்களை நீண்டகாலத்துக்கு அவதானிக்க வேண்டியுள்ளதுன் அவர்களின் நோயெதிர்ப்புச் சக்தி எவ்வளவு காலத்துக்கு நீடிக்கின்றது என்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் ஊடாகவே கொரோனா வைரஸிக்கு எதிரான மருந்துகள் கண்டுபிடிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசி மருந்துகள் மிகவிரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளதுடன் கடுமையான பாதிப்புக்களை எதிர்கொண்டுவரும் நாடுகளுக்கு இது ஓரளவு பாதுகாப்பளிக்கும் என நம்பப்படுகின்றது.

Read next: பிரித்தானியாவுக்கு பயணிப்பவர்களை தனிமைப்படுத்தும் காலத்தை குறைக்க அரசாங்கம் அனுமதி