பிரித்தானியவில் கொரோனா வைரஸ் தொற்றின் இன்றய நிலவரம்

1 month

இன்று (15 அக்டோபர் 2020) பிரித்தானிய அரசு அறிவித்த தகவலின் படி  மொத்தம்  18,980 (நேற்று 19724) புதிய தொற்றுகள் பதிவாகி உள்ளது.  பிரித்தானியாவில் மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை தற்போழுது 673,622  (நேற்று654,644) ஆக உயர்ந்துள்ளது.

இறப்புகளைப் பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றி 28 நாட்களுக்குள் மேலும் 138 (நேற்று 137) பேர் பலியாகினர். இன்றய இறப்புகளின் எண்ணிக்கையையும் சேர்த்து கொரோனா வைரஸ் தாக்கி 28 நாட்களுக்குள் மொத்தம் 43,293   (நேற்று 43,155) பேர் இறந்ததாகப் பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது.

இதே வேளையில் 57,690 பேரின் மரணச் சான்றிதழில் இறந்தவர்களுக்குக் கொரோனா வைரஸ் தொற்றி இருந்ததாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது (இந்தத் தகவல் வாரம் ஒரு முறைக்கு வெளியிடப்படும்)

குறிப்பு: பிரித்தானிய அரசின் தரவுகள் ஒருவர் கொரோனா தொற்றி 28 நாட்களில் இறந்தால் மட்டுமே அவர் கொரோனா தாக்கி இறந்ததாகக் கணக்கில் கொள்கிறது. இதன் காரணமாக உண்மையில் கொரோனா தாக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.

இன்று அரசு அறிவித்த தகவலின் படி மொத்தம் 4,941 (நேற்று 4,650) பேர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இவர்களிள்563  (நேற்று 516) பேர் சுவாசக்கருவி பொருத்திய படுக்கையில் உளளர்கள். இன்று மட்டும் புதிதாக 792 (நேற்று 680) பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். இன்றய தரவுகளையும் சேர்த்து மொத்தம் 150,378 (நேற்று 149,548) பேர் இதுவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உளளார்கள்.

Read next: இரண்டாம் அடுக்குக் கட்டுப்பாட்டுக்குள் நுழைந்த லண்டன் நகரம்