அமெரிக்காவில் 19ஆம் திகதிக்கு பின்னர் வயது வந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி–ஜோ பைடன்

1 week

அமெரிக்காவில் எதிர்வரும் 19ஆம் திகதிக்குள் 18 வயது பூர்த்தியான அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியானவர்களாகின்றனர் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில்,  தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இந்த நிலையில், எதிர்வரும் 19ஆம் திகதிக்குள் 18 வயது பூர்த்தியான அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியானவர்கள் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக வெள்ளை மாளிகையில் உரையாற்றிய அவர், இனி குழப்பம் விளைவிக்கும் விதிகளோ, கட்டுப்பாடுகளோ கிடையாது என தெரிவித்துள்ளார்.இதன்படி எதிர்வரும் 19ஆம் திகதிக்கு பின்னர் வயது வந்தவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள தகுதியானவர்களாகின்றனர் என தெரிவித்துள்ளார்.அதற்கு முன்னர் நாட்டிலுள்ள மூத்த குடிமக்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.தனது 75 நாட்கள் பதவிக்காலத்தில் 15 கோடி டோஸ்கள் வரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன என்றும் இதுவரை 75 சதவீத மூத்த குடிமக்களுக்கு ஒரு டோஸ் செலுத்தப்பட்டள்ளதாக தெரிவித்துள்ளார்.இந்த நிலையில், தன்னுடைய 100ஆவது நாள் பதவி காலம் முடிவில் 20 கோடி பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.மேலும் பொதுமக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் மற்றும் முக கவசங்களை அணிந்து கொள்ளுதல் வேண்டும் எனவும் அவர்  வலியுறுத்தியுள்ளார்

Read next: தோட்ட தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஓரிரு நாளில் தீர்வு.