கொரோனா விழிப்புணர்வு அறிவியல் கண்காட்சி!

Sep 14, 2021 12:54 pm

கொரோனா பேரிடர் காலம் என்பதால் கடந்த ஒரு வருட காலமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு இருப்பதால் மாணவர்கள் நோய் தொற்றிலிருந்து எவ்வாறு தங்களை தற்காத்துக்கொள்ளவேண்டும் என்ன வகையான உணவுகள் உட்கொள்ள வேண்டும் என்பது குறித்து அறிவியல் விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது 

சென்னை ராயபுரத்தில் உள்ள எட்டியப்ப நாயக்கர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் பள்ளியை சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் நோய் தொற்றில் பொதுமக்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது குறித்து  செயல்முறை விளக்கத்துடன் எடுத்துரைத்தனர்.

தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு நோய் எதிர்ப்பு சக்திகள் தடுப்பு விழிப்புணர்வு வழிமுறைகள் இயற்கை மருத்துவம் உள்ளிட்டவை கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன பள்ளி மாணவர்களும் பொது மக்களும் பயன்பெறும் வகையில் என்னென்ன உணவுகள் உட்கொள்ள வேண்டும் எதிர்ப்பு சக்திக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டன.

இதில் பொதுமக்கள் பெற்றோர்கள் ஏராளமானோர் வந்து பார்த்து சென்றனர்.கண்காட்சி மூலம் கொரோனாவை முற்றிலுமாக ஒழிக்க முடியும் என பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது

Read next: அகில இந்திய தகவல் மற்றும் சட்ட முன்னணி இயக்கம் மற்றும் மெரிடியன் மருத்துவமனை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்!