கொலம்பியா சுரங்க விபத்தில் 11 பேர் பலி : 10 பேரை காணவில்லை!

Mar 16, 2023 08:29 am

கொலம்பியாவில் நிலக்கரி சுரங்கமொன்று இடிந்து விழுந்ததில்  குறைந்தபட்சம் 11 ஊழியர்கள் உயிரிழந்ததுடன் மேலும் 10 பேர் காணமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. .

 கொலம்பியாவின்  சுதாதவ்சா பகுதியிலுள்ள சுரங்கத்தில் நேற்று இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. இதில்   11 ஊழியர்கள் உயிரிழந்தனர். இருவர் மீட்கப்பட்டுள்ளதுடன்ன, மேலும் 10 ஊழியர்களை காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவர்களை கண்டுபிடிப்பதற்கான அவசர தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேற்படி சம்பவம் துரதிஷ்டவசமான அனர்த்தம் என கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ கூறியுள்ளார்.

Read next: ரஷ்யாவிற்கு உளவு பார்த்த ஆறுபேர் போலந்தில் தடுத்துவைப்பு!