உக்ரைன் - ரஷ்யா போர்! இலங்கை எடுத்த அதிரடி நடவடிக்கை

Mar 28, 2022 10:31 am

ரஷ்யாவின் மொஸ்கோவிற்கான விமான சேவையினை ஸ்ரீலங்கன் விமான சேவை மறு அறிவித்தல் வரும் வரை இடைநிறுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை காரணமாக, சில சர்வதேச நிதி மற்றும் விமான காப்புறுதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமை இதற்கான காரணமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கட்டுப்பாடுகளால், ரஷ்யாவுக்கான ஸ்ரீலங்கன் விமான சேவை நேரடியாக பாதிக்கும் என அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் மொஸ்கொவ்க்கு இடையில், வாராந்தம் 2 விமான சேவைகளை, ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனம் முன்னெடுத்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read next: ஒரே நாளில் பொழுதுபோக்கு பூங்காவிற்கு ஆண் , பெண் செல்ல தலீபான்கள் தடை