மூடப்பட்ட சிலிக்கான் வேலி வங்கி - எலான் மஸ்க் எடுத்துள்ள தீர்மானம்

Mar 12, 2023 01:17 am

அமெரிக்காவில் திவாலன நிலையிலை மூடப்பட்ட சிலிக்கான் வேலி வங்கியை வாங்கும் யோசனை உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்தார்.

உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க், மூடப்பட்ட சிலிக்கான் வேலி வங்கியை (SVB) வாங்கி, அதனை டிஜிட்டல் வங்கியாக மாற்றும் யோசனை இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கிகளின் ஒன்றான 160 பில்லியன் டொலர் சொத்து மதிப்புள்ள சிலிக்கான் வேலி வங்கி (Silicon Valley Bank) அதன் கட்டுப்பாட்டாளர்களால் மூடப்பட்டது.

அதன் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என FDIC தெரிவித்துள்ளது.

சிலிக்கான் வேலி வங்கி வீழ்ச்சி பங்குச் சந்தைகளில் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. 2008ம் ஆண்டு நிதி நெருக்கடிக்குப் பிறகு ஏற்பட்டுள்ள அத்தகைய பெரிய வங்கிச் சரிவு மற்ற சந்தைகளுக்கும் பரவக்கூடும் என்ற கவலை உருவாகியிருக்கிறது.

 கேமிங் ஹார்டுவேர் நிறுவனமான ரேசரின் (Razer) தலைமை நிர்வாக அதிகாரி மின்-லியாங் டான் (Min-Liang Tan), டுவிட்டர் நிறுவனம் எஸ்விபி-ஐ வாங்கி டிஜிட்டல் வங்கியாக மாற்ற வேண்டும் என்று நினைப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதற்கு எலான் மஸ்க், தனக்கு அந்த யோசனை உள்ளது என்று பதிலளித்துள்ளார்.


Read next: வவுனியாவில் பிரபல வைத்தியரின் மகனின் முடிவால் அதிர்ச்சியில் குடும்பத்தினர்