கோக்குக்கு ஆப்பு வைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ-காணொளி இணைப்பு

Jun 16, 2021 05:00 pmஹங்கேரி : யூரோ கோப்பை 2020 கால்பந்து போட்டிகள் ஐரோப்பாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடரின் நடப்பு சாம்பியன் போர்ச்சுகலின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ. நேற்றைய போட்டிக்கு முன்புக பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதில் அமைதியாக வந்து கலந்து கொண்ட ரொனால்டோ ஆர்ப்பாட்டமில்லாமல் செய்த செயல், கோடிக்கணக்கான பணத்தை வாரி சுருண்டியிருக்கிறதாம். இந்த சந்திப்பில் அவர் பேச வருவதற்கு முன்பாக யூரோ கோப்பையின் முக்கிய ஸ்பான்சரான கொக்க கோலாவின் இரண்டு பாட்டில்கள் மேஜையில் வைக்கப்பட்டிருந்தது. இது ஒரு வழக்கமான நடைமுறை தான்.
ஆனால் பத்திரிகையாளர் அறைக்கு வந்த ரொனால்டோ செய்த செயல்தான் நடைமுறைக்கு மாறாக இருந்தது. பத்திரிகையாளர் அறைக்குள் நுழைந்த அவர், தனக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த இரண்டு கோக் பாட்டில்களையும் உற்றுப் பார்த்துவிட்டு இரண்டையும் தூக்கி கீழே மறைத்து வைத்து விட்டார்.

அதோடு நிறுத்தாமல் அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து வைத்து இதை குடியுங்கள் என்று பத்திரிகையாளர்களுக்கு சைகை செய்துள்ளார். இதனால் ரொம்ப அதிகமில்லீங்க, ரூ.29,337 கோடி கோகோ கோலா நிறுவனத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 4 பில்லியன் அமெரிக்க டாலர்.

இதையடுத்து யூரோ தொடர் ஸ்பான்சர்கள் மத்தியில் ரொனால்டோவின் செயல் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாம். 2 கோக்கோ கோலா பாட்டில்களை மறைத்து வைத்து அந்த நிறுவனத்தின் வருவாய்க்கு ஆப்பு வைத்துள்ளார் ரொனால்டோ.

Read next: எதிர்பாராத அளவில் நாட்டில் சுகாதார நிலைமை முன்னேறியுள்ளது – பிரான்ஸ் பிரதமர்