“ஜப்பான் மீது அணுகுண்டு வீசுவோம்” பகிரங்க மிரட்டல் விடுத்துள்ள சீனா - அதிகரிக்கும் பதற்றம்

Jul 20, 2021 10:08 am

சீனாவுக்கு எதிராக தலையீடு நடந்தால்  ஜப்பான் மீது அணுகுண்டு வீசுவோம் என்ற காணொளியை சீனா அதிகாரிகள் மீண்டும் வெளியிட்டுள்ளனர்.

சீனாவுக்கு எதிராக ஜப்பான் நிர்வாகம் ஒரு ராணுவ துருப்பையேனும் தைவானுக்கு அனுப்பினால் ஜப்பான் சின்னாபின்னமாகும் என அந்த காணொளியில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சீனா ராணுவம் தொடர்பில் கருத்துகளை வெளியிடும் ஒரு குழுவே குறித்த காணொளியை தயாரித்துள்ளனர். 

இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஜப்பானுக்கு எதிராக எச்சரிக்கை விடுக்கும் குறித்த  காணொளி வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால் குறிப்பிட்ட சில காரணங்களுக்காக அந்த காணொளியானது இணையத்தில் இருந்து நீக்கப்பட்டது. 

இந்த நிலையில், தற்போது குறித்த காணொளியை மீண்டும் சீனத்து அதிகாரிகளே இணையத்தில் பதிவேற்றியுள்ளனர்.

தைவானை ராணுவ ரீதியாக கைப்பற்ற சீனா முயற்சிக்கும் என்றால் ஜப்பான் கண்டிப்பாக நடவடிக்கை முன்னெடுக்கு எனவும், அது தங்கள் நாட்டுக்கு விடுக்கப்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல் எனவும் ஜப்பான் குறிப்பிட்டிருந்தது.

மேலும், தைவானில் சீனப் படையெடுப்பு நடந்தால், ஜப்பானிய படைகள் ஒரு கூட்டுப் பாதுகாப்பை மேற்கொள்வதில் அமெரிக்க துருப்புக்களுடன் சேர வேண்டியிருக்கும் என்று துணைப் பிரதமர் டாரோ அசோ தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Read next: ராஜாகோபாலன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் !