பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நுழைய சீன தூதுவருக்கு தடை

Sep 14, 2021 09:49 pm

Photo: ChineseEmbinUK/facebook

பிரித்தானிய நாடுளுமன்றம் உறுப்பினர்கள் மற்றும் பிரபுக்கள் சிலர் மீது சீனாவால் போடப்பட்ட தடையை நீக்கும் வரை சீனாவின் பிரித்தானியாவுக்கான தூதுவர் பிரித்தானிய நாடாளுமன்றத்துக்குள் நுழைய முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவுக்கான அணைத்து கட்சி குழுவினால் வரவேப்பு நிகழ்வு புதன் கிழமை நடைபெற இருக்கும் வேளையில் சீன தூதுவர் ஷெங் சுவாங் அந்த நிகழ்வில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

 பலரிடம் இருந்து எதிர்ப்பு வந்ததால் இந்த அழைப்பு மீளப்பெறப்பட்டது.

 இது தொடர்பாக சீன தூதுவர் அலுவலகம் தெரிவிக்கையில் இந்த செயல் சகிக்கமுடியாத மற்றும் கோழைத்தனமான செயல் என்று அறிவித்துள்ளது.

 கடந்த மார்ச் மாதம் பல பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது சீனாவுக்குள் நுழையக்கூடாது என்று தடை விதித்ததுடன் அவர்களின் சொத்துக்களையும் முடக்கியது. இது சீனாவில் சின்ஜியாங் மாகாணத்தில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்ட மனித உரிமை மீறல்களுக்காக சீன அதிகாரிகள் மீது மேற்கொள்ளப்பட்ட பயணத் தடையை தொடர்ந்தே சீனா இவ்வாறு பழிக்கு பழி வாக்கும் முகமாக பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரபுக்கள் மீது தடையை விதித்தது.

 இவ்வாறு இருக்கும் சூழலிலேயே சீன தூதுவர் அழைக்கப்பட்டு இருந்தார்-இருப்பினும் அது மீளப்பெறப்படு இருக்கிறது.

 

Read next: அவுஸ்திரேலிய தலைநகரின் பொது முடக்கம் நீடிப்பு