தாய்வானுக்கு ஆயுத விற்பனை செய்யும் அமெரிக்க நிறுவனங்களுக்கு சீனா பொருளாதார தடை

Oct 26, 2020 07:54 pm

தாய்வானுக்கான ஆயுத விற்பனையுடன் தொடர்புள்ளதாக தெரிவித்து லொக்ஹீட் மார்ட்டின் பொயிங் டிபென்ஸஸ் ரேய்தியோன் உள்ளிட்ட மேலும் சில அமெரிக்க நிறுவனங்களுக்கு எதிராக சீனா பொருளாதார தடை விதிக்க உள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஸாஓ லிஜியன் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய நலனை பாதுகாத்ததாகவும் எவவாறான பொருளாதார தடை விதிக்கப்படும் என்பதை தெரிவிக்கவில்லை என்றும் பேச்சாளர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

சென்சர்கள் ஏவுகணைகள் மற்றும் பீரங்கிகள போன்ற மூன்று ஆயுத முறைமையை தாய்வானுக்கு விற்பனை செய்வதற்கு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அனுமதி அளித்திருந்தது.

இந்த விற்பனையின் பெறுமதி 1.8 பில்லியன் டொலர் பெறுமதி என பெண்டகன் குறிப்பிட்டுள்ளது.

வழிதவறிய மாகாணமாக தாய்வானை சீனா கருதுவதுடன் தேவை ஏற்படின் படையினைக் கொண்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவுத் தீர்மானித்துள்ளது.

பெரும்பாலான நாடுகளை போன்றே தாய்வானுடுன் அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ இராஜதந்திர உறவு இல்லை.ஆனாலும் நாட்டுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு அமெரிக்க கட்டுப்பட்டுள்ளது.

தென்சீனக்கடல் ஹொங்கொங் மனித உரிமைகள் மற்றும் வர்த்தகம் போன்றவற்றில் இணக்கப்பாடின்றி  சீனாவும் அமெரிக்காவும் உள்ள நிலையில் மேலும் முரணபாட்டை அதிகரிக்கச் செய்யும் வகையில் தாய்வானுக்கு ஆயுத விற்பனை மூலமும் தமது இராஜதந்திரிகளை அங்கு அனுப்புவதன் மூலமும் அமெரிக்கா ஆதரவு வழங்கி வருகின்றது.

சீன வான் போக்குவரத்து சமூகத்துடன் தமது நிறுவனத்தின் உறவு நீண்ட காலம் காணப்பட்டதாகவும் தொடர்ந்தும் அது பாதுகாக்கப்படும் என்றும் பொயிங் நிறுவனம் மின்னஞ்சல் மூலமான அறிக்கையை அனுப்பியுள்ளது.

இதேவேளை தனது அனைத்து சர்வதேச ஆயுத விற்பனையும் அமெரிக்க அரசாங்கத்தினால் கடுமையாக கட்டுப்படுத்தப்படுவதாகவும் தனது பிரசன்னம் சீனாவில் வரையறுக்கப்பட்டுள்ளதாகவும் லொக்ஹீட் மார்ட்டீன் மின்னஞ்சல் மூலம் குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்த கருத்தை ரேய்த்தியோன் தெரிவிக்கவில்லை.

 

Read next: துருக்கி-பிரான்ஸ்-இஸ்லாம்- உலக அரசியல்: என்ன நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது?