ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு 02 வாரங்களுக்குள் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் - சீனா

Sep 14, 2021 10:00 am

மிக அண்மையில் சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டமைக்கு ஆரம்ப பாடசாலை ஒன்றின் மாணவர் ஒருவருடனான தொடர்பே காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தை அடுத்து புஜியான் மாகாணத்தில் தொற்றாளர்கள் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்திருந்தது.

குறித்த மாணவரின் தந்தை  சிங்கப்பூரிலிருந்து நாடு திரும்பியிருந்ததாகவும் அவருக்கு கொரோன தொற்று ஏற்பட்டிருந்தமையால் அது பாடசாலையில் பரவியுள்ளது என ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

சிங்கப்பூரிலிருந்து நாடு திரும்பிய மாணவரின் தந்தை தனிமைப்படுத்தலில் இருந்துள்ளதாகவும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டிருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர் சீனாவுக்கு திரும்பி 38 நாட்களின் பின்னரே தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இதனையடுத்து 2 வாரங்களுக்குள் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கொரோனா தொற்று பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

4 நாட்களில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றினால் அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த மாகாணத்தில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன் எவரேனும் மாகாணத்தை விட்டு வெளியேறுவதாயின் 48 மணித்தியாலங்களுக்குள் பெறப்பட்ட கொரோனா தொற்று பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக பரவுவதை தடுப்பதற்காக கடுமையான சில நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் முதன் முதலில் பரவியமை சீனாவில் என்பது குறிப்பிடத்தக்கது.

Read next: அமெரிக்காவை தாக்கும் மற்றுமொரு புயற்காற்று