கோவிட்-19 தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கான அனுமதியை சீனாவிற்கு வழங்கிய உ. சு. அமைப்பு

Sep 26, 2020 11:56 am

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து அவசர நிலைத் திட்டத்திற்கு உலக சுகாதார ஸ்தாபனம் ஆசிர்வதித்துள்ளதாக சீனா தெரிவிப்பு.

பரிட்சார்த்த பரிசோதனை நடைபெறும் நிலையிலேயே ஜுலை மாதம் குறிப்பிட்ட சிலரிடம் சீனாவின் தடுப்பூசி பிரசாரத்தை மேற்கொள்வதற்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆதரவு கிடைத்துள்ளதாக சீன சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

என்றாலும் சில நிபுணர்கள் இது குறித்து கவலை வெளியிட்டுள்ளனர்.

ஜுன் மாத பிற்பகுதியில் உலக சுகாதார ஸ்தாபனத்துடன் கலந்தாலோசித்து ஜுலை மாதம் சீனா தனது அவசரகால திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தேசிய சுகாதார ஆணைக்குழு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறிருக்க 3ம் கட்டத்தையேனும் நிறைவு செய்யாததால் இதன் செயற்றிறன் மற்றும் பாதுகாப்பு நிரூபிக்கப்படவில்லை.இருப்பினும்  nhற்றின் அபாயத்தில் இருப்பவர்கள் அத்தியாவசிய ஊழியர்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட மக்கள் குழுக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானவர்களிடம் இந்த தடுப்பு மருந்து பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை குறித்து சில நிபுணர்கள் தமது கவலையை வெளியிட்டுள்ளனர்.

ஜுன் மாத இறுதியில் சீனாவின் தேசிய சபை கொவிட் 19 தடுப்பு மருந்து அவசர திட்டத்தை அங்கீகரித்தது.

இந்த அங்கீகாரத்தின் பின்னர் ஜுன் 29 ஆம் திகதி சீனாவில் உள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் இது குறித்து உலக சுகாh ஸ்hபனத்தின் புரிதலை பெற்றுக்கொண்டதாகவும் தேசிய சபை அதிகாரி ஸெங் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய விதிமுறைகள் மற்றும் சட்டங்களின் படி எந்த ஒரு சுகாதார தயாரிப்புக்கும் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை வழங்குவதில் நாடுகளுக்கு தன்னாட்சி உள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் உதவி பணிப்பாளர் வைத்தியர் மரியன்கெல்லா சிமாஓ ஜெனீவாவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தடுப்பு மருந்தின் அவசரகால பயன்பாட்டுக்கான அங்கீகாரமானது தற்காலிக தீர்வு என்றும் 3ம் கட்டம் நிறைவுபெற்றால் மாத்திரமே நீண்டகால தீர்வு கிடைக்கும் என்றும் இம்மாத ஆரம்பத்தில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதம விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

தனது அவசரகால பயன்பாட்டுத் திட்டம் தொடர்பான முழுமையான தகவல்களை  சீனா பகிரங்கமாக வெளியிடவில்லை.

சீன தேசிய பயோடெக் குழுமம் மற்றும் சினொவெக் பயோடெக் நிறுவனம் வெளிநாடுகளில் 3ம் கட்ட பரிசோதனையை மேற்கொண்ட நிறுவனங்கள் உள்ளிட்ட மூன்று கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் அவசரகால பயன்பாட்டுத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

கென்சினோ பயோலொஸஜிக்ஸ் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட நான்காவது தடுப்பு மருந்து ஜுன் மாதம் அளவில் சீன இராணுவத்தினரிடம் பயன்படுத்துவதற்கான அனுமதி கிடைத்தது.

2020 ஆம் ஆண்டின இறுதியில் சீனாவின் வருடாந்த கொவிட் 19 தடுப்பு மருந்து தயாரிப்பு இயலுமையானது 610 மில்லியன் டோஸ்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் 1 பில்லியன் டோஸ்கள் 2021 ஆம் ஆண்டு தயாரிக்கப்படும் என்றும் ஸென்ங் தெரிவித்;துள்ளார்.

சீனாவில் பொதுமக்களுக்கு தேவையான வகையில் மலிவானாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Read next: ஐ.நாவில் காஷ்மீர் குறித்து இம்ரான் கான் உரை - கூட்டத்தில் இருந்து இந்திய பிரதிநிதி வெளிநடப்பு