இலங்கையில் இணையத்தில் விற்பனை செய்யப்பட்ட 15 வயதுச் சிறுமி! அதிர்ச்சி செய்தி

Jun 17, 2021 07:30 am

இலங்கையில் 15 வயது சிறுமியை பாலியல் நடவடிக்கைகளுக்காக இணைத்தளத்தில் விற்பனை செய்த சம்பவத்தில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொரட்டுவை நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்சமயம் சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சிறுமியை பல்வேறு இளைஞர்களுடன் பாலியில் நடவடிக்கையில் ஈடுபட ஊக்குவித்ததாகவும், வழிநடத்தியதாகவும் ஜம்புரெலிய வசிக்கும் 26 வயதுடைய மேற்படி சந்தேகநபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சந்தேக நபர் நேற்று கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read next: ரூ.1000 சம்பளத்திற்காக 26 கிலோ கொழுந்து பறிக்க உத்தரவு