முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை சந்தித்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்ஸில் தலைவர்

May 14, 2022 10:54 am

 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்ஸில் தலைவர் திரு. பி.எஸ். அமல்ராஜ், துணை தலைவர் திரு. வி. கார்த்திகேயன், அகில இந்திய பார்கவுன்ஸில் துணை தலைவர் திரு.எஸ். பிரபாகரன் மற்றும் அதன் உறுப்பினர்கள், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் திரு. ஜி. மோகனகிருஷ்னன், அதன் துணை தலைவர் செல்வி ஆர். சுதா, செயலாளர் திரு.ஆர். கிருஷ்ணகுமார் மற்றும் அதன் நிர்வாகிகள், மெட்ராஸ் பார் அசோசேஷன் தலைவர் திரு. வி.ஆர். கமலநாதன், அதன் செயலாளர் திரு.டி. சீனிவாசன் மற்றும் அதன் நிர்வாகிகள், பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் திருமதி லூயிசால் ரமேஷ், அதன் பொருளாளர் திருமதி பி. மாரியம்மாள் மற்றும் அதன் நிர்வாகிகள் சந்தித்து,

தமிழ்நாடு வழக்கறிஞர்கள் நல நிதி மூலம் வழங்கப்படும் சேம நல நிதியினை 7 இலட்சத்திலிருந்து 10 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கியமைக்காகவும், உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி கருத்தில் கொள்ள வேண்டும், தமிழ் மொழி உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக ஆக்கப்பட வேண்டும், உச்சநீதிமன்றத்தின் ஒரு கிளையினை சென்னையில் அமைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் 23.4.2022 அன்று நடைபெற்ற விழாவில் உரையாற்றியதற்காகவும் நன்றி தெரிவித்துக் கொண்டனர். உடன் நாடாளுமன்ற உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான திரு. பி. வில்சன் அவர்கள் உள்ளார்.

Read next: உதகை அரசு ரோஜா பூங்காவில் 17 வது ரோஜா கண்காட்சி இன்று துவங்கியது