மனித குலத்தை மிரட்டும் கொரோனாவை விட மிக மோசமான புதிய வைரஸ் கண்டுபிடிப்பு!

1 week

பொலிவியாவின் தலைநகரான லா பாஸில் புதிய வகை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (சிடிசி) ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த நோய் 2 நோயாளிகளிடமிருந்து 3 சுகாதாரப் பணியாளர்களுக்கு தொற்றியுள்ளது.

உலகெங்கிலும் உள்ள அரசுகள், விஞ்ஞானிகள் மற்றும் சுகாதார வல்லுநர்கள் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலைகளுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கையில்,  அமெரிக்காவின் சி.டி.சி.யின் ஆராய்ச்சியாளர்கள் இப்போது இந்த வைரஸ் பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள். 

சாபரே வைரஸ் ரத்தக் கசிவு காய்ச்சல் (சி.எச்.எச்.எஃப்) எபோலா வைரஸ் நோய் (இ.வி.டி) போன்றவற்றுக்கு  காரணமான அதே அரினா வைரஸ் குடும்பத்தினால் ஏற்படுகிறது.

இந்த வைரஸ் முதன்முதலில் கவனிக்கப்பட்ட மாகாணத்தின் பெயரால் சாபரே என்று பெயரிடப்பட்டது.  

இந்த வைரஸ், வயிற்று வலி, வாந்தி, ஈறுகளில் இரத்தக் கசிவு, தோல் சொறி மற்றும் கண்களுக்கு பின்னால் வலி ஆகியவற்றுடன் எபோலா போன்ற ஒரு ரத்தக்கசிவு காய்ச்சலை ஏற்படுத்துகிறது. 

இந்த வைரஸ் ரத்தக்கசிவு காய்ச்சல்  என்பது கடுமையான உயிருக்கு ஆபத்தான ஒரு வகை நோயாகும். இது பல உறுப்புகளை பாதிக்கும் மற்றும் இரத்த நாளங்களின் சுவர்களை சேதப்படுத்தும்.

இருப்பினும், இந்த மர்மமான சப்பரே வைரஸ் பற்றி அதிகம் அறியப்படவில்லை. இந்த வைரஸ் பற்றி முறையாக ஆவணப்படுத்தப்படுவதற்கு முன்பே,  பல ஆண்டுகளாக பொலிவியாவில் இந்த வைரஸ் பரவலாக இருந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.  

கிடைத்திருக்கக்கூடிய ஆதாரங்களின் அடிப்படையில், நோய்க்கு சிகிச்சை அளிக்கும் சுகாதாரப் பணியாளர்கள் அதிக அபாயத்தில் உள்ளனர். 

இதனால், நோயாளிகளின் இரத்தம், சிறுநீர், உமிழ்நீர் அல்லது விந்து ஆகியவற்றால் மாசுபடுத்தக்கூடிய பொருட்களுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்க நோயாளிகளை கையாளும் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

சாபரே வைரஸ் உடன் தொடர்புடைய ஆர்.என்.ஏ எனப்படும் மரபணு துண்டுகளையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இந்த வைரஸ் பாதிக்கப்பட்டு உயிர்பிழைத்த ஒருவர் 168 நாட்களுக்குப் பிறகு அவரின் விந்துவில் இந்த நோய் பாலியல் ரீதியாகவும் பரவக்கூடும் என்று இது தெரிவிக்கிறது.

Read next: மற்றைய ஐரோப்பிய நாடுகளைப் போல் ஜெர்மனியிலும் இறப்புகள் அதிகரிப்பு!