மனைவியுடன் சஹல் போட்ட சூப்பர் ஆட்டம்... வைரலான வீடியோ

Jun 17, 2021 03:55 pm

ஹரியானா : இந்திய அணியின் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சஹலுக்கு இந்தாண்டு ஐபிஎல் தொடர் சரியாக அமையவில்லை. முதல் 2 போட்டிகளில் விக்கெட் எதுவுமே எடுக்காத அவர், 3வது போட்டியில் இருந்துதான் விக்கெட் எடுக்க தொடங்கினார். இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 4 விக்கெட்களை எடுத்துள்ளார்.

மேலும் கடந்த தொடர்களிலும் இவர் சிறப்பான ஆட்டத்தை வழங்கவில்லை. இவரின் மோசமான ஃபார்ம் காரணமாக இங்கிலாந்து சுற்றுப்பயணத்திலும் சஹலுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆயினும் இலங்கை அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் சஹலுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்தியா - இலங்கை அணிகள் வரும் ஜூலை மாதம் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளன. இந்த வாய்ப்பை சஹல் சரியாக பயன்படுத்திக்கொண்டால் டி20 உலகக்கோப்பையில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் தொடர் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் பல்வேறு வீரர்கள் தங்களது வீடுகளில் ஓய்வில் உள்ளனர். இதேபோல சஹலும் தன்னுடைய மனைவியுடன் கொண்டாட்டமாக பொழுதை கழித்து வருகிறார். அந்தவகையில் யுஸ்வேந்திர சஹல் தற்போது வீட்டில் இருந்துக்கொண்டு பொழுதுபோக்கிற்காக தன்னுடைய மனைவியுடன் இணைந்து இன்ஸ்டாகிராம் ரீல்களை செய்து வருகிறார்.

இவர் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டீவாக இருக்கக்கூடியவர். இன்ஸ்டாகிராமில் 65 லட்சம் பேர் இவரை பின் தொடர்ந்து வருகின்றனர். அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வந்த சஹல் தற்போது தனது மனைவி தனஸ்ரீ வர்மா உடன் இணைந்து நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார்.மேகன் வான்ஜிக் இசை ஒன்றுக்கு அவரும் அவரது மனைவி தனஸ்ரீ-ம் இணைந்து உட்கார்ந்தபடியே நடன அசைவுகளை செய்துள்ளனர். வீடியோ வெளியிட்ட 2 மணி நேரத்தில் சுமார் 2,50,000 லைக்குகளை ரசிகர்கள் அள்ளி வீசியுள்ளனர். இதுமட்டுமல்லாமல் 1000 பேருக்கும் மேல் கமெண்ட் செய்துள்ளனர். சஹாலின் குறும்பு தனத்தை விரும்பும் ரசிகர்கள் இந்த வீடியோவை தற்போது வைரலாக்கி வருகின்றனர்.

Read next: இங்கிலாந்தில் வெடிகுண்டு தயாரிக்கு காணொளியுடன் சிக்கிய 15 வயது பாடசாலை மாணவி!