பாலம் கட்டும் பணியில் 60கோடி ரூபாய் டெண்டர் முறைகேடு வழக்கு சிபிஐ அதிகாரிகள் விசாரணை

Sep 22, 2022 11:37 am

திருச்சி ரயில்வே கோட்ட முன்னாள் செயற்பொறியாளர் சக்கரபாணி, பாலம் கட்டும் பணியில் 60கோடி ரூபாய் டெண்டர் முறைகேடு,வழக்கு சம்மந்தமாக கோவையில் உள்ள ஒமேகா கன்ஸ்ட்ராக்ஸன் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை.

திருச்சி ரயில்வே உட்கோட்டத்துக்கு துணை செயற்பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் சக்கரபாணி.இவர் கடந்த  2019 ஆம் ஆண்டு ஒரு டெண்டர் விட்டிருக்கின்றார். இந்த டெண்டர் திருச்சி ரயில்வே உட்கோட்டத்துக்கு உட்பட்ட திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட இடங்களில் லெவல் கிராசிங்கில் ஓவர் பிரிட்ஜ்(பாலம்) கட்டுவதற்காக ஒப்பந்தம் கோரப்பட்டு இருக்கின்றது. 

இதற்கு பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்ட நிலையில் இறுதியாக கோவை உப்பிலிபாளையத்தைச் சார்ந்த ஒமேகா கண்ஸ்ட்ரக்சன் நிறுவனம் தேர்வு ஆனது. திருச்சி ரயில்வே உட்கோட்டத்துக்கு உட்பட்ட லெவல் கிராசிங் இல் பிரிட்ஜ் கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்ட இடங்கள் விமர்சனத்திற்கு உள்ளானது.

ஆனாலும் அதனை மீறி 38 கோடி ரூபாய் அளவில் டெண்டர் விடப்பட்ட நிலையில் அந்த பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ரயில்வே கிளாசிங்கில் மேம்பாலம் கட்டுவதற்கு இதுவரை 60 கோடி ரூபாய்க்கு மேலாக செலவானதாக கணக்கு காண்பித்து இருக்கின்றனர். 

இது முற்றிலுமாக ரயில்வே துறையில் இருந்து எடுக்கப்பட்ட நிதி ஆகும். ஆனால் மாநில அரசிடம் இருந்து பெறவேண்டிய நிதி ஒரு ரூபாய் கூட பெறவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் ரயில்வே துறையின் தற்போதைய அதிகாரிகளால் மதுரை சிபிஐ கிளையில் புகார் தரப்பட்டது. 

புகாரின் அடிப்படையில் அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிந்த சிபிஐ அதிகாரிகள் விசாரணையை நடத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில் முன்னாள் செயற்பொறியாளர் சக்கரபாணி அலுவலகத்தில் சிபிஐ விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சக்கரபாணி எடுத்த டெண்டரின் பணிகளை மேற்கொண்ட உப்பிலிபாளையத்தைச் சார்ந்த ஒமேகா நிறுவனத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.இதில் டெண்டர் குறித்தான ஆவணங்கள் ஆய்வுக் குட்படுத்தப்பட்டதாக தெரிகின்றன. 

முன்னாள் செயற்பொறியாளரே டெண்டர் விட்டு கோடிக்கணக்கில் கொள்ளையடித்ததாக தரப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிந்து சிபிஐ விசாரணையில் ஈடுபடுவது பரபரப்பாகியிருக்கின்றன.

Read next: பாரிஸில் காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இந்திய பெண் - நீதிமன்றத்தின் கோரிக்கை