முதலீடுகள் மீது (காப்பிடல் ஜெயின்) விதிக்கும் வரியை இரட்டிப்பாக்க ரிஷி சுனக் ஆலோசனை

3 weeks

Photo Credit: Rishi Sunak

 மூலதன வருவாய் மீதான வரி பில்லியன் பவுண்ஸ்  அளவில் அதிகரிக்கப்படலாம் என புதிய தகவல் வெளியாகி உள்ளது.

வரி விலக்குகளை குறைப்பதன் மூலமும்  வரியை இரட்டிப்பாக்குவதன் மூலமும்  மூலதான ஆதாயம் மீதான வரி 14 பில்லியன் பவுண்ஸ்களால் அதிகரிக்கபபடலாம் என பிரித்தானிய நிதி அமைச்சர் ரிஷி சுனக்கின் மதிப்பாய்வில் இருந்து தெரியவந்துள்ளது.

வரி செலுத்துகைக்கு உட்படாமல் வீடு உள்ளிட்ட இரண்டாவது உடமை வைத்திருக்கும் செல்வந்தர்களே இதனால் பாதிக்கப்படுவார்கள்.

கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்படும் பல்லின செலவுகளை ஈடுசெய்ய வழிகளை தேடும் சந்தர்ப்பத்தில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

தெரிவு செய்யப்பட்ட டொரி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வரி அதிகரிப்பு தொடர்பில் செயற்பாடுகள் இருக்காது என்பதை செப்டெம்பரில் மீளவும் உறுதியளித்திருந்தார்.

மக்கள் கட்டணப்பட்டியல் தொகையை குறைக்க முற்பட்டால் மூலதன ஆதாய வரி அம்சங்களில் சிக்கல்கள் ஏற்படும் என்பதை வரி சீராக்கும் அலுவலகம் கண்டுபிடித்துள்ளது.

அடிப்படை செலுத்துநர்களுக்கு 10 வீதமும் அதிகூடிய தொனை செலுத்துவோருக்கு 20 வீதமும் விதிக்கப்படும் என அரசர்க நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இது வருமான வரியோடு இணைந்தால் இரட்டிப்பாகும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலதக வருமான வரி  என்பது உங்களுக்கு உரித்தான சொத்துக்களையோ அல்லது பங்குகளையோ விற்கும் போது கிடைக்கும் இலாபத்திற்கு அறவிடப்படும் வரி.

எனவே விலக்குகள் குறைக்கப்படும் போது திரட்டப்படும் தொகை அதிகரிக்கும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read next: பேர்லோ (furlough) திட்டத்தில் நான் இணைந்து கொள்ளலாமா, எவ்வளவு பெறமுடியும்?