தோல்வியை எதிர்நோக்கும் ரூடோ-முன்கூட்டியே தேர்தலுக்கு அழைப்பு விடுத்தது சரியே...

Sep 10, 2021 09:12 pm

கனடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ அவர்கள் செப்டம்பர் 20 இல் நடைபெறும் தேர்தலில் தோல்வியை எதிர்நோக்கி உள்ள நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன்னராகவே தேர்தலுக்கு அழைப்பு விடுத்ததை  நியாயப்படுத்து பேசியதுடன் எதிர் கட்சியினர் வெற்றி பெற்றால் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் நிறைவாக செயல்பட மாட்டார்.

தற்பொழுது சிறுபான்மை அரசை நடத்திவரும் ரூடோவின் லிபெரல்ஸ் கட்சி சட்டங்களை இயற்றுவதற்கு மற்றைய காட்சிகளை தங்கி இருக்க வேண்டிய சூழலில் தனது கட்சி கொரோனா வைரஸ் பரவலை வெவ்வனே கையாண்டதற்காக தெளிவான பெரும் பான்மையை பெறலாம் என்று எண்ணியே இந்த தேர்தலுக்கு அழைப்பு விடுத்து இருந்தார்.

இருப்பினும் ஆறு வருடம் பதவியில் இருந்த ரூடோ அவர்கள் கோவிட் நான்காவது அலை பரவிக்கொண்டு இருக்கும் வேளையில் தேர்தலுக்கு அழைப்பு விடுத்ததை விரும்பவில்லை. கன்செர்வேட்டிவ் கட்சியின் தலைவர் எரின் ஓ டூல், 48 வயது, அவர்கள் லிபெரல் கட்சியின் ரூடோவை விட சிறிதளவு முன்னிலையில் உள்ளார்.

தேர்தலை முன்னதாகவே அழைத்ததற்காக வருத்தப்படுகிறீர்களா என்று ஊடகவியாளர்கள் கேட்டதற்கு, நிச்சியமாக இல்லை, நாட்டை எவ்வாறு முன்னெடுத்து செல்வது என்பது தொடர்பாக அணைத்து கட்சிகளுக்கும் இடையே தெளிவான வேறுபாட்டை காட்டுகிறது என்று கூறினார்.


எதிர் கட்சியினரால் குற்றம் சாட்டப்படும் ரூடோ, மக்களை கொள்கை விதமான விவாதத்தை நோக்கி திருப்புவதற்கு பெரும் சிரமப்படுகிறார்.

வியாழன் நானோஸ் ரிசேர்ச் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் கன்செர்வேட்டிவ் கட்சி 33.3 விகித ஆதரவையும் லிபெரல்ஸ் 31.3 விகித ஆதரவையும், நியூ டெமோகிராட்ஸ் 19.2 விகித ஆதரவையும் பெற்றுள்ளன.

Read next: கனடாவில் பிறந்த இருவர்-ஒருவர் கனடியர் மற்றவர் பிரித்தானியர்-வெல்லப்போவது யார்?