கருத்துக்கணிப்பில் ரூடோவை பின்னுக்கு தள்ளும் ஓடூல்-கடுமையான தாக்குதலில் ரூடோ

Sep 06, 2021 09:55 pm

Photo Credit: Justin Trudeau

கடந்த ஞாயிறு இடம்பெற்ற சிடிவி-க்காக  1200 பேரிடம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் கன்செர்வேட்டிவ் கட்சி 34.9 விகித புள்ளிகளையும், லிபெரல்ஸ் 33.4 புள்ளிகளையும் மற்றும் நியூ டெமோகிராட்ஸ் 18.9 பெற்று இருந்தன. திங்கள் அன்று நானோஸ் நிறுவனத்தால் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் கன்செர்வேட்டிவ்ஸ் 35.5 விகிதத்தையும் லிபெரல்ஸ் 33 விகிதத்தையும் பெற்று இருந்தது.

இதன் காரணமாக ஜஸ்டின் ரூடோ அவர்கள் கடுமையான கலக்கத்தில் உள்ளார் போல் தெரிகிறது. செப்டம்பர் 20 இல் தேர்தல் நடைபெற உள்ள சூழலில் ரூடோ ஓடூல் அவர்களின் துப்பாக்கி உரிமம் தொடர்பான நிலைப்பாட்டையும் தடுப்பு மருந்து எடுத்துக்கொள்வது தொடர்பான நிலைப்பாட்டையும் கடுமையாக சாடினார்.

உண்மையான தலைவர்கள் தாம் நம்பும் கொள்கைகளை பின்பற்றவேண்டும் வேண்டும் என்றும் ஓடூல் அவ்வாறான தலைவர் இல்லை என்றும் ரூடோ தெரிவித்தார்.

முக்கியமாக ஓடூல் அவர்கள் சில தாக்கும் துப்பாக்கிகள் தொடர்பான தடையை நீக்குவதாக தமது தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்தார், இருப்பினும் தற்பொழுது அந்த நிலைப்பாட்டில் இருந்து விலகிக்கொண்டுள்ளார். இதற்க்கு முக்கிய காரணம் ரூடோ அவர்களின் கடுமையான விமர்சனம் ஆகும். ஒன்ராறியோவில் பேசும் பொழுது ரூடோ தெரிவிக்கையில் ஓடூல் வெற்றிபெறுவதக்கு எதைவேண்டுமானாலும் சொல்வர் என்று குற்றம் சாட்டினார்.

எவ்வளவு  தமது வேட்பாளர்கள் தடுப்பு மருந்தை பெற்றுள்ளார்கள் என்பதை ஓ டூல் வெளியிடவில்லை, இருப்பினும் தடுப்பு மருந்தை பெறாதவர்கள் ஒவ்வொரு நாலும் கொரோனா சோதனை செய்யவேண்டும் என்று தெரிவித்தார்.

தனது ஆட்சிக்காலம் முடியும் 2 வருடம் முன்னதாகவே ஜஸ்டின் ரூடோ அவர்கள் இந்த தேர்தலுக்கு அழைப்பு விடுத்தவர் என்பது இங்கு குறிப்பிடக்கூடியது. கொரோனா வைரஸ் பரவலை எவ்வாறு அவர் கையாண்டார் என்பதற்கான மக்களின் தீப்பாய் பெறவே இந்த தேர்தலை அழைத்தாகவும் அவர் முன்னர் தெரிவித்து இருந்தார்.  

Read next: கர்ப்பிணி பெண் பொலிஸை சுட்டுக் கொலை செய்த தலிபான்கள்?? வெடித்தது சர்ச்சை