கனடாவில் பரபரப்பை ஏற்படுத்திய விபத்து - இருவர் மரணம், 9 பேர் காயம்

Mar 14, 2023 06:27 am

கனடாவின் வட பகுதியில் உள்ள ஆம்க்கீ நகரில் நேற்று நேர்ந்த விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாகனம் மோதியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 9 பாதசாரிகள் காயமுற்றனர்.

சம்பவத்தின் தொடர்பில் 38 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் பொலிஸ் அதிகாரி கூறினார்.

அந்த நபர் வேண்டுமென்றே மக்களின் மீது வாகனத்தை மோதியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸ் விசாரணை நடத்திவருகிறது.

உயிரிழந்த இருவருமே 60 வயதைக் கடந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

காயமடைந்தவர்களில் இருவரின் உடல்நிலை மோசமாய் உள்ளதாகக் கூறப்பட்டது.

Read next: இனி பல்கலைக்கழக மாணவர்களுக்கு மனநலப் பரிசோதனை!