கொரோனாவை ஒழிக்க சிவப்பு எறும்பு சட்னியா? உச்ச நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு

Sep 11, 2021 11:55 am

ஒடிசா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் வசிக்கக்கூடிய பழங்குடியினர் சிவப்பு எறும்பு சட்னியை விருப்ப உணவாக சாப்பிட்டு வருகின்றனர். 

இந்த சிவப்பு எறும்புகள் உடன் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து அதைத் தேங்காய் சட்னி போல பயன்படுத்துகிறனர்.

அண்மையில், ஒடிசாவை சேர்ந்த பொறியாளர் ஒருவர் இது தொடர்பாக பொதுநல வழக்கு ஒன்று தொடர்ந்தார். 

அதில் சிவப்பு எறும்பு சட்னியில் இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம் ஆகியவை அதிகமாக இருப்பதாகவும், இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், கொரோனாவுக்கு மருந்தாக இதனை பரிந்துரைக்க வேண்டும் எனவும் அவர் தனது கோரிக்கையில் தெரிவித்துள்ளார். 

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு அனுமதிக்கப்பட்டது.

இதை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், விக்ரம் நாத் மற்றும் ஹிமா கோலி ஆகியோர் கொண்ட அமர்வு பாரம்பரிய மருந்துகள் நிறைய உள்ளன. 

இவற்றையெல்லாம் கொரோனாவிற்கு மருந்தாக பயன்படுத்த முடியாது.

இந்த எறும்பு சட்னியை நீங்கள் உங்கள் சொந்த பயன்பாட்டுக்காக வைத்திருக்கலாம். ஆனால் நாடு முழுவதும் உள்ள அனைவருக்கும் இந்த எறும்பு சட்னியை நாங்கள் கொடுக்க உத்தரவிட முடியாது.

மேலும் ஒடிசா பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இந்த மனுதாரர் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என கூறி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அந்த மனுவை தள்ளுபடி செய்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன.

Read next: அமெரிக்காவை கடுப்பேத்தும் தலிபான்களின் முயற்சி தோல்வி! பிற்போடப்பட்டது புதிய அரசு பதவி ஏற்பு விழா