ஜனாதிபதியிடம் கடும் கோரிக்கை விடுக்க மொட்டு எம்.பிக்கள் திட்டம்

Oct 01, 2022 01:09 pm

ஜப்பான் மற்றும் பிலிபைன்ஸுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இன்று (01) காலை இலங்கையை வந்தடைந்துள்ள நிலையில் அவரிடம் மிகக் கடுமையான கோரிக்கையை முன்வைக்க அரசாங்கத்தின் எம்.பிக்கள் குழுவொன்று  தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையைக் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறே அவர்கள் கோரிக்கை விடுக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையைக் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு முன்னாள் அமைச்சர் விமலவீர திஸாநாயக்க மற்றும் கொழும்பு மாவட்ட எம்.பியான ஜகத் குமார சுமித்ரராச்சி ஆகியோர் அண்மையில் ஜனாதிபதியிடம் விசேட கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read next: பிரான்ஸில் பல நகரங்களில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய நடைமுறை