பதவியை இராஜினாமா செய்த பிரித்தானிய பிரதமர் - வரலாற்றில் இடம் பிடித்தார்

Oct 20, 2022 01:45 pm

பிரித்தானிய பிரதமர் லிஸ் ட்ரஸ் பதவியை இராஜினாமா செய்துள்ளார்

சற்று முன்னர் இந்த செய்தி வெளியாகியுள்ளது.

ட்ரஸ் இரண்டு மாதங்களுக்கும் குறைவான காலப்பதியிலேயே பதவியில் இருந்து பதவியில் இருந்து விலகியுள்ளார்.

தனது ராஜினாமாவை அறிவித்த பிரதமர், “கன்சர்வேடிவ் கட்சியால் நான் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆணையை என்னால் வழங்க முடியாது என்பதை நான் அங்கீகரிக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

44 நாட்களுக்கு முன்பு பதவியேற்ற ட்ரஸ், அவர் பதவி விலகும் போது பிரித்தானிய வரலாற்றில் மிகக் குறுகிய காலம் பிரதமராக பதவி வகித்தவர் அவராகும்.

பொருளாதாரத்தை கொந்தளிப்பில் ஆழ்த்திய வரவு செலவு திட்டத்தை தொடர்ந்து பல வாரங்களாக ஏற்பட்ட குழப்பத்திற்குப் பிறகு அவர் இராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Read next: பிரித்தானிய அரசியலில் குழப்பநிலை - விரைவில் அதிகாரத்தை கைப்பற்றும் புதிய பிரதமர்