தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய பிரித்தானியரை வெளியேற்ற நடவடிக்கை

Jul 19, 2021 08:39 am

சர்ச்சைக்குரிய பிரித்தானிய வர்ணனையாளர்  கைய்ட்டி ஹொப்கின்சை அவுஸ்திரேலியா நாட்டிலிருந்து வெளியேற்ற உள்ளது.

நாட்டில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியதாக அவர் ஒப்புக்கொண்டதை அடுத்து நாட்டிலிருந்து வெளியேற்றப்பட உள்ளதாக அவுஸ்திரேலிய உள்விவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பிரபல தொலைக்காட்சி ஒன்றிற்காக சிட்னிக்கு சென்ற அவர் முகக்கவசமின்றியும் தனிமைப்படுத்தலில் ஹோட்டலில் இருந்த போது அவருக்கு உணவளித்தமை மூலம் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு வரும் அனைவரும் இரண்டு வாரங்கள் ஹோட்டலில் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.

உணவை பெற்றுக்கொள்ள 30செக்கன்கள் காத்திருக்க வேண்டும் என்பதுடன் இதன்போது தொற்றை தவிர்க்கும் வகையில்  முகக் கவசம் அணிவதும் கட்டாயமாகும்.

இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாது முடக்கத்தில் நாட்டு மக்கள் இருக்கும் போது வெளிநாட்டவர்கள் இவ்வாறு நடந்துக்கொள்வது கண்டித்தக்கது என பலரும் விமர்சிக்க தொடங்கினர்.

சிரித்து பேசும் காணொளியை அவர் இன்ஸரகிராமில் பதிவிட்டதை அடுத்தே இந்த எதிர்ப்புகள் கிளம்பின.

இதனையடுத்து குறித்த வீடியோ நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Read next: கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொள்ள வேண்டும் என நரேந்திர மோடி தெரிவிப்பு !