ரஷ்யாவிற்கு எதிராக களமிறங்கும் பிரித்தானியா! பிரதமர் லிஸ் டிரஸ் அதிரடி

Sep 23, 2022 12:43 am

உக்ரைனின் கைகள் மேலோங்கும் வரை தாங்கள் ஓய்வெடுக்கப்போவது இல்லை என பிரித்தானிய பிரதமர் லிஸ் டிரஸ் தெரிவித்துள்ளார்.

உக்ரைன்,ரஷ்ய போர் குறித்து ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ரஷ்யாவை தோற்கடிக்கும் வரை உக்ரைனுக்கு தேவையான அனைத்து இராணுவ உதவிகளும் தொடர்ந்து வழங்கப்படும் என பிரித்தானிய பிரதமர் லிஸ் டிரஸ் உறுதியளித்துள்ளார். 

மேலும், உக்ரைனுக்கு எதிரான போரை தீவிரப்படுத்தும் நோக்கில் படைகளை திரட்ட ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்டுள்ள நிலையில், உக்ரைனின் கைகள் மேலோங்கும் வரை தாங்கள் ஓய்வெடுக்கப்போவது இல்லை எனவும் லிஸ் டிரஸ் தெரிவித்துள்ளார்.

Read next: இந்தியாவில் முஸ்லீம் குழு மீது நாடு தழுவிய சோதனை - 100 க்கும் மேற்பட்டோர் கைது