கடவுச்சீட்டை உடனடியாகப் புதுப்பிக்குமாறு வெளிநாடு செல்வோருக்கு பிரித்தானியா அறிவுறுத்தல்

Mar 18, 2023 04:57 pm

கோடை விடுமுறைக்கு வெளிநாடு செல்வதற்குத் திட்டமிடும் பிரித்தானியர்கள் தங்கள் கடவுச்சீட்டை இப்போதே புதுப்பிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடவுச்சீட்டு அலுவலகத்தில் ஐந்து வார வேலைநிறுத்தப் போராட்டத்தின் விளைவாக ஏற்படக்கூடிய காலதாமதத்தைத் தவிர்க்கும் நோக்கிலேயே இந்த கோடையில் வெளிநாடு செல்ல விரும்பும் குடும்பத்தினர் தங்களது கடவுச்சீட்டை இப்போதே புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸில் உள்ள 1,000 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் ஏப்ரல் 3 - மே 5 வரை வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Read next: இம்ரான் கானின் வீட்டின் கதவை உடைத்து பலவந்தமாக உள்ளே நுழைந்த பொலிஸார்