கொரோனா தொற்றை சமாளிக்க அமைச்சரவையை மாற்றினார் பிரேசில் ஜனாதிபதி

2 weeks

பிரேசில் ஜனாதிபதி ஜெயிர் பொல்சொனாரோ தனது அமைச்சரவையில் ஆறு அமைச்சர்களை மாற்றியுள்ளார்.

இந்த அமைச்சரவை மாற்றத்தில் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களும் மாற்றப்பட்டுள்ளனர். 

பதவிக்கு வந்த இரண்டு ஆண்டுகளில் பொல்சனாரோ அமைச்சரவையில் முக்கிய மாற்றங்கள் கொண்டுவருவது இது முதல் முறையாகும்.

ஏற்கனவே பிரேசிலில் கொரோனா தொற்று ஆரம்பித்தது தொடக்கம் நான்கு முறை சுகாதார அமைச்சர் மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரேசிலில் இரண்டாவது அலை கொரோனா பரவல் தீவிரம் அடைந்திருக்கும் நிலையில் நாட்டின் சுகாதார கட்டமைப்பு நிலைகுலைந்துள்ளது.

எனினும் பொல்சொனாரோ தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை எதிர்த்து வருவதோடு அது நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் என்று கூறி வருகிறார்.

எனினும் கொரோனா தொற்றினால் பிரேசிலில் 300,000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருப்பதோடு 12 மில்லியனுக்கும் அதிகமான நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

Read next: சீனாவில் இருந்து 6 இலட்சம் தடுப்பூசிகள் இன்று நாட்டை வந்தடையவுள்ளன.