உலகிலேயே மிக மோசமான இரண்டாவது சாதனையை படைத்தது பிரேசில் - நிபுணர்கள் எச்சரிக்கை

Jun 20, 2021 11:01 am

பிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 500,000 ஐத் தாண்டியுள்ளது. இது உலகின் இரண்டாவது மிக உயர்ந்த எண்ணிக்கையாகும்.

பிரேசிலின் தாமதமான தடுப்பூசி திட்டத்தால் குளிர்காலத்தின் தொடக்கத்தில் வெடிப்புக்கள் மோசமடையக்கூடும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் போன்ற நடவடிக்கைகளை ஆதரிக்க மறுப்பதால் இந்த வைரஸ் தொடர்ந்து பரவுகிறது.

நிலைமை சிக்கலானது என்று சுகாதார நிறுவனம் பியோக்ரூஸ் கூறுகிறது. 

அங்கு 15% பெரியவர்களுக்கு மட்டுமே முழுமையாக தடுப்பூசி போடப்படுகிறது.

பிரேசிலில் கடந்த வாரத்தில் தினமும் சராசரியாக 70,000 பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

சனிக்கிழமையன்று, போல்சனாரோ அரசாங்கத்திற்கு எதிராகவும், தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்தக் கோரி ஆயிரக்கணக்கான மக்கள் நாடு முழுவதும் எதிர்ப்புத் தெரிவித்தனர். 

Read next: தென்கொரியாவில் சமூக இடைவெளி கட்டுப்பாடு ஜுலை முதல் தளர்த்தப்படும்.