கனடா - ஸ்காபரோவில் துப்பாக்கிச் சூடு!! இளைஞர் ஒருவர் பலி

Sep 22, 2022 12:44 am

கனடா - ஸ்காபரோவில் 17 வயது இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ம்பவம் கில்டர் டிரைவ் மற்றும் எக்ளிண்டன் அவென்யூ ஈஸ்ட் பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடம் அருகே பிற்பகல் 3:43 மணியளவில் பதிவாகியுள்ளது.

ஐந்து பதின்ம வயதினர் அப்பகுதியில் இருந்து ஓடுவதைக் காணமுடிந்ததாக பொலிசார் கூறுகின்றனர்.

எனினும், அவர்கள் சந்தேகத்திற்கிடமானவர்களா அல்லது துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டு ஓடினார்களா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

சந்தேகத்திற்குரிய விளக்கங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

மாலை 4:30 மணிக்கு முன்னதாக மருத்துவமனையில் குறித்த நபர் உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர். அவரது உடலில் பல துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அருகில் இருந்த பல பாடசாலைகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டதுடன் சிறிது நேரத்தில் பாதுகாப்பு தளர்த்தப்பட்டுள்ளது.

அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சாட்சி ஒருவர், துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டு தனது பால்கனிக்கு ஓடியதாகவும், அங்கு ஐந்து பேர் கில்டர் டிரைவ் கீழே ஓடுவதைக் கண்டதாகவும் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Read next: வறுமையின் கொடுமை - இலங்கையில் மதிய உணவிற்காக தேங்காய் கொண்டுவந்த மாணவி