உணவு, தண்ணீரின்றி இரண்டு நாட்களின் பின் உயிருடன் மீட்கப்பட்ட சிறுவன்

Nov 24, 2022 01:31 pm

இந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் இடிபாடுகளில் இருந்து ஆறு வயது சிறுவன் உணவு மற்றும் தண்ணீரின்றி இரண்டு நாட்களின் பின் இடிபாடுகளுக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.

271 பேர் உயிரிழந்த இந்த அனர்த்தத்தின் இடிபாடுகளில் இருந்து உயிர் பிழைத்தவர்களை இன்னும் உயிருடன் இழுக்க முடியும் என்ற நம்பிக்கையை இந்த மீட்பு நடவடிக்கை ஏற்படுத்தியுள்ளது.

அஸ்கா உயிருடன் இருப்பதை நாங்கள் உணர்ந்தவுடன், அனைவரும் கண்ணீர் விட்டனர் என்று 28 வயதான உள்ளூர் தன்னார்வலர் ஜெக்சன் கூறினார்.

இது ஒரு அதிசயம் போல் உணர்ந்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டமான Cugenang இல் ஒரு வீட்டிலிருந்து சிறுவன் அஸ்காவை மீட்கும் பணியில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அவரது தாயார் இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தார். அஸ்கா மீட்க சில மணிநேரங்களுக்கு முன்பு அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

சிறுவன் இறந்த தாயின் அருகில் கண்டுபிடிக்கப்பட்டான் என்று ஜெக்சன் கூறினார்.

இடிந்து விழுந்த மற்றொரு சுவரைத் தாங்கியிருந்த ஒரு சுவரால் மட்டுமே அவர் காப்பாற்றப்பட்டார், அது அவர் மீது விழுவதைத் தடுத்துள்ளது என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

48 மணி நேரத்திற்குப் பிறகும் அவர் உயிருடன் இருப்பார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை,  எங்களுக்குத் தெரிந்தால் முந்தைய இரவில் நாங்கள் கடினமாக முயற்சித்திருப்போம் என்று, என்று அவர் கூறினார்.

“நான் தன்னார்வலராக ஆனதில் இருந்து இத்தனை வருடங்களாக இது போன்ற எதையும் நான் பார்த்ததே இல்லை. எப்படி அழாமல் இருக்க முடியும்?”

நிலநடுக்கத்தில் இறந்தவர்களில் பலர் பள்ளியிலோ அல்லது வீடுகளிலோ இருந்த குழந்தைகள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே, காணாமல் போன ஏழு வயது சிறுமி உட்பட இடிபாடுகளுக்குள் புதைந்து கிடக்கும் டஜன் கணக்கானவர்களை அதிகாரிகள் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

Read next: 3ம் உலகப்போருக்குப் பின் உள்ள உலகம் : ஆதாரங்களை வெளியிட்டுள்ள டைம் ட்ராவலர்