லண்டன் கோர விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கைக் குழந்தை

1 month

மேற்கு லண்டனில் நேற்று மாலை ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்த மூன்று வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேற்கு லண்டனில் Hayes - Uxbridge சாலையில் நேற்று இரவு 7 மணியளவில் குறித்த விபத்து ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில் உயிரழந்த குழந்தை இலங்கையைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்ற.

வவுனியா - கோவில்குஞ்சுக்குளத்தை பூர்வீகமாகக் கொண்டு லண்டனில் வசித்து வந்த சசிகரன் அகர்வின் என்ற குழந்தையே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

குறித்த குழந்தை தனது தாயுடன் நகர்ப்பகுதிக்கு சென்றவேளை வீதியில் வேகமாக வந்த கார் மோதியதில் படுகாயமடைந்துள்ளார்.

படுகாயமடைந்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

Read next: தடுப்பூசி தயாரிப்பை திடீரென இடைநிறுத்தியது ஜான்சன் அண்ட் ஜான்சன்