முல்லைத்தீவில் குண்டுவெடிப்பு! ஆபத்தான நிலையில் ஒருவர்

Jun 15, 2021 05:05 pm

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இரணைப்பாலை பகுதியில் இன்று மலை குண்டுவெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

இந்த சம்பவத்தில் 64 வயதுடைய முதியவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காணியில் இருந்த குப்பைகளை கூட்டி நெருப்பு வைத்த போது அதிலிருந்த குண்டு வெடித்ததில் குறித்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

அம்மன் கோயில் வீதி ,5 ஆம் வட்டாரம் , இரணைப்பாலை, புதுக்குடியிருப்பு பகுதியில் வசித்துவரும் 64 வயதுடைய நபர் ஒருவரே காயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்துக்குச் சென்ற புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு குறித்த பகுதியில் வேறு வெடிபொருட்கள் இருக்கிறதா என்பது தொடர்பிலும் ஆராய்ந்து வருகின்றனர்.

Read next: நுகர்வோரிடம் கொள்ளை இலாபம் பெறுவதற்கு முற்படும் வியாபாரிகள்