காபூலில் பாடசாலைக்கு அருகில் குண்டு வெடிப்பு- 50 பேர் பலி, 150 பேர் காயம்

May 08, 2021 10:16 pm

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமைத்துள்ள சயீத் உல் ஷுஹடா உயர் நிலை பள்ளியின் வாசலில் கார் குண்டு வெடித்ததால் சுமார் 50 பேர் உயிரிழந்தனர் மேலும் 150 பேர் வரையில் காயமடைந்துளளதாக அங்கு இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இறந்தவர்களில் 8 பேரை தவிர மற்றவர்கள் பாடசாலை பெண் குழந்தைகள் என்று ஒரு பெயர் குறிப்பிட முடியாத பாதுக்காப்பு அதிகாரி ரெளட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்தார். பெண் குழந்தைகள் பாடசாலையை விட்டு வெளியேறும் நேரத்திலேயே கார் குண்டு வெடிக்க வைக்கப்பட்டுள்ளது.

குண்டு வெடிப்புக்கு இதுவரை ஒருவரும் உரிமை கோரவில்லை, இருப்பினும் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி இந்த தாக்குதலை தலிபான் மீது சுமதித்தி உள்ளார். இந்த குண்டு வெடிப்பு  ஷெய்ட் முஸ்லிம்கள் வாழும் பகுதியில் இடம் பெற்றுள்ளது. இதே நாளில் சென்ற வருடம் இவ்வாறான தாக்குதல் ஒன்றை மகப்பேறு மருத்துவமனையில் இஸ்லாமியக் ஸ்டேட் தீவிர வாதிகள் நடத்தி இருந்தார்கள்.

Read next: மீண்டும் புத்துயிர் பெறும் அண்ணா நூற்றாண்டு நூலகம்.