ஒப்பீட்டளவில் கொரோனவால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் ஆசிய இனத்தவரே

3 weeks

வெள்ளை இனத்தவர்களையும் விட கறுப்பினத்தவர்கள் இரண்டு தடவைகள் கொவிட் தொற்றுக்குள்ளாகக்கூடும் என ஆய்வொன்றில் இருந்து தெரியவந்துள்ளது.

ஆனால் இவர்கள் தொற்றினால் உயிரிழக்க மாட்டார்கள் என லெஸ்டர் மற்றும் நொட்டிங்ஹம் பல்கலைக்கழகங்களின் ஆய்வறிக்கை குறிப்பிடுகின்றது.

ஆசிய பின்புலத்தைக்கொண்டவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாவதுடன் கடுமையாக பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர்.

ஐக்கிய இராஜ்ஜியம் மற்றும் அமெரிக்கா முழுவதிலும் மேற்;கொள்ளப்பட்ட 50 ஆய்வுகளில்  18 மில்லியன் மக்கள் பங்கெடுத்துள்ளனர்.

BAME எனும் கறுப்பு ஆசிய மற்றும் சிறுபான்மையினத்தவர்கள் ஏன் அதிகூடிய கொவிட் 19 ஆபத்தை எதிர்கொள்கின்றார்கள் என்பதற்கான பதில் கிடைக்கவில்லை.

இதற்கு சில காரணிகள் இருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவிகின்றனர்.

BAME எனும் மக்களே சுகாதாரம் போன்ற முக்கிய தொழில் புரிபவர்கள் என்பதுடன் இவர்கள் சுகாதார சீர்கேடுகளை சந்தித்துள்ளவர்களும் ஒரு வீட்டில் அதிகளவானோர் வாழ்பவர்களும் ஆவர்.

இதனாலேயே விரைவில் தொற்றுக்குள்ளாகுவதாக நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதுவரையிலும் எந்த ஒரு ஆதாரமும் இல்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து வருவதுடன் மரபணுவே காரணம் என குற்றஞ்சாட்டப்படுகின்றது.

என்றாலும் இதுகுறித்து விஞ்ஞானிகள் ஆய்வுகளை நடத்தி வருகின்றனர்.

கொள்கை வகுப்பாளர்களுக்கு தமது கண்டுபிடிப்புகள முக்கியமானதாக இருக்கும் என விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்;.அத்துடன் இதன் மூலம் தடுப்பு மருந்து முன்னுரிமை பட்டியலில் மாற்றமும் ஏற்படலாம்.

இந்த நிலையில் தொற்று நோயை குறைக்க முடியும் என்றால் கறுப்பு ஆசிய மற்றும் சிறுபான்மையின மக்களின் உயிரிழப்புகளையும் குறைக்கலாம் என விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆசிய மக்கள் கடுமையான நோய்வாய்ப்படல் மற்றும் உயிரிழப்புக்கான காரணத்தை ஒரு வார்த்தையர் விளக்க முடியும் என்று தான் எண்ணவில்லை என ஆய்வின் இணை எழுத்தாளர் வைத்தியர் ஜெட்டின்டர் மின்ஹஸ் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் சிறுபான்மை இனத்தவர்களாக இருப்பது கொவிட் 19 ஆபத்தை ஏற்படுத்தும் காரணி அல்ல என எழுத்தாளர்களில் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால்  அண்மைய ஆய்வொன்றில் விளக்க முடியாத சில குழுக்களிடையே அதிகளவான ஆபத்துக்கள் காணப்படுவதாக  ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

Read next: தொலைக்காட்சி சேவை ஒன்றை ஆரம்பிக்கவிருக்கும் டிரம்ப்!