சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம், ஆசிரியர் கைது

நான்கு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இங்கிலாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பர்மிங்காமைச் சேர்ந்த 28 வயதான நபர் திங்களன்று அதிகாரிகளால் முதலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் நேற்று (14) அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.
வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பொலிஸார் நான்கு வெவ்வேறு சிறுமிகள் மீதான தாக்குதல்கள் மற்றும் ஆசிரியர் அநாகரீகமான படங்களை அனுப்பியமை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர் நகரத்தில் உள்ள ஒரு பாடசாலையின் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பயிற்றுவிக்கப்பட்ட அதிகாரிகள் பாடசாலையில் மாணவர்களுக்கு ஆதரவளிக்கின்றனர், மேலும் விசாரணை தொடரும் போது பாதுகாப்பை உறுதிசெய்ய நாங்கள் இணைந்து பணியாற்றி வருகிறோம் என பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Read next: உக்ரைன் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான G7 ஆதரவை நிராகரித்த மெட்வெடேவ்