ஒற்றுமையின் அவசியத்தையே செப். 11 தாக்குதல் கற்றுத்தந்துள்ளது - பைடன்

Sep 11, 2021 09:47 am

அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதல் நடத்தப்பட்ட இன்றுடன் 20 வருடங்கள் பூர்த்தியாகின்றது.

2001 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் தாக்கப்பட்டன.

இதன் நினைவுதினம் அமெரிக்கா முழுவதும் இன்று நினைவுகூரப்பட்டு வருகின்றது.இந்த நிலையில் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதையே இந்த தாக்குதல் கற்றுத்தந்துள்ளதாக தான் கருதுவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.

இரட்டைக் கோபுரத் தாக்குதலில் 2977 பேர் பலியாகினர்.இவர்களின் ஆத்ம சாந்திக்கான நினைவு நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

இந்த நிலையில் தாக்குதலின் போது எடுக்கப்பட்ட செயற்கோள்கள் படங்களை மெக்ஸர் டெக்னொலொஜிஸ் வெளியிட்டுள்ளது.

செப்டம்பர் 11  2001 அன்று  நான்கு அமெரிக்க விமானங்களை அல்கொய்தா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 19 பேர் கடத்தினர். இரண்டு விமானங்கள் நியூயோர்க் நகரத்தில் உலக வர்த்தக மையம் அமைந்திருந்த இரட்டைக் கோபுரங்களின் மீதும் மற்றைய விமானம் வொஷிங்டனில் உள்ள அமெரிக்க இராணுவத் தலைமையகமான  பென்டகன் மீதும் மோதின. நான்காவது விமானம் கட்டுப்பாட்டை இழந்து பென்சில்வேனியாவில் உள்ள வெட்டவெளியில் தரையில் வீழ்ந்து வெடித்துச் சிதறியது.

இதனையடுத்து பயங்கரவாதத்திற்கு எதிரான தமது செயற்பாடுகளை தொடங்கியது அமெரிக்கா.

  இரட்டை கோபுரத் தாக்குதலின் சூத்திரதாரி என கருதப்பட்ட   ஒசாமா பின்லேடனைப் பிடிக்க ஆப்கானில் போரில் ஈடுபட்டது அமெரிக்கா.

Read next: இரண்டு கல் மாதிரிகளை சேகரித்தது பேர்சவெரன்ஸ் ரோவர்