BREAKING - உலக வரலாற்றிலேயே முதல் தடவையாக அமெரிக்க ஜனாதிபதியின் அதிகாரங்கள் தமிழர் வசமானது

Nov 19, 2021 04:05 pm

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தனது அதிகாரங்களை தற்காலிகமாக உப ஜனாதிபதி கமலா ஹாரிசிடம் கையளித்துள்ளதாக வெள்ளை மாளிகை தகவல்களை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுகயீனம் காரணமாக ஜோ பைடன், சிகிச்சை பெற்றுவரும் நிலையிலேயே, ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் உப ஜனாதிபதியிடம் இன்று (19) முதல் கையளிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் ஜனாதிபதிக்கான அதிகாரங்களை பெற்றுக்கொள்ளும் முதலாவது பெண் தலைமைத்துவம் இவர் என சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இதன்படி, தமிழ் பரம்பரையைச் சேர்ந்த ஒருவர் அமெரிக்காவின் ஜனாதிபதியாக கடமையாற்றும் முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

2002 மற்றும் 2007ல் அப்போதைய ஜனாதிபதி ஜார்ஜ் டபிள்யூ. புஷ்ஷும்  மருத்துவ சிகிச்சையை மேற்கொண்டபோது, ​​இதே நடைமுறை பின்பற்றப்பட்டதாக வெள்ளை மாளிகை செய்தியாளர்களிடம் செய்தியாளர் செயலாளர் ஜென் சாகி குறிப்பிட்டார்.

இந்த நேரத்தில் துணைத் தலைவர் மேற்குப் பிரிவில் உள்ள அவரது அலுவலகத்தில் இருந்து பணிபுரிவார் என்றும் அறிவிக்கப்பட்டது.

அமெரிக்காவின் மிக வயதான ஜனாதிபதியான பைடனுக்கு 79 வயதாகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read next: 5 – 11 வயதினருக்கு பைஸரை செலுத்த கனடா அனுமதி