இன்றைய கிழமைக்கான பலன்

May 13, 2022 11:46 pm

சித்திரை: 31

சனிக்கிழமை

14 - 05 - 2022

ராசி- பலன்கள்

மேஷம் - ராசி

எதிர்பாராத தனவரவு கிடைக்கும். எந்தவொரு செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வாழ்க்கை துணையின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் அமையும். வெளியூர் தொடர்பான வேலைவாய்ப்பு சாதகமாக அமையும். நண்பர்களின் ஆலோசனைகள் நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவினை ஏற்படுத்தும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு.

அஸ்வினி : சுறுசுறுப்பான நாள். 

பரணி : மகிழ்ச்சி உண்டாகும். 

கிருத்திகை : தெளிவு ஏற்படும்.


ரிஷபம் - ராசி

கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். எதிர்பாராத தனவரவு கிடைப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வியாபாரத்தில் பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். பிறமொழி பேசும் மக்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். வரவு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்.

கிருத்திகை : அன்யோன்யம் அதிகரிக்கும். 

ரோகிணி : மகிழ்ச்சியான நாள். 

மிருகசீரிஷம் : ஆதாயம் ஏற்படும்.


மிதுனம் - ராசி

சேமிப்பை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு பொறுப்பும், ஆதரவும் மேம்படும். உத்தியோக பணிகளில் சூழ்நிலைகள் அறிந்து செயல்படவும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உயர்கல்வி தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்.

மிருகசீரிஷம் : சிந்தனைகள் அதிகரிக்கும். 

திருவாதிரை : புரிதல் உண்டாகும்.

புனர்பூசம் : முடிவு கிடைக்கும்.


கடகம் - ராசி

எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் அதை சமாளிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உறவினர்களின் வழியில் எதிர்பாராத சில அலைச்சல்கள் ஏற்படும். புதிய முயற்சிகளில் அனுபவம் மேம்படும். குழந்தைகளின் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும். நெருக்கமானவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். தேவைகள் நிறைவேறும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு  

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.

புனர்பூசம் : வாய்ப்புகள் உண்டாகும். 

பூசம் : அனுபவம் மேம்படும்.

ஆயில்யம் : விவாதங்களை தவிர்க்கவும்.


சிம்மம் - ராசி

அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கைகூடும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். திறமைக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கப் பெறுவீர்கள். விருப்பம் நிறைவேறும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

மகம் : ஒத்துழைப்பு கிடைக்கும். 

பூரம் : மந்தத்தன்மை குறையும்.

உத்திரம் : பாராட்டுகள் கிடைக்கும்.


கன்னி - ராசி

இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் வழியில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோக பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். போட்டி தேர்வுகளில் மாற்றமான சூழல் ஏற்படும். ஆதாயகரமான நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை.

உத்திரம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும். 

அஸ்தம் : திறமைகள் வெளிப்படும்.

சித்திரை : மாற்றமான நாள்.


துலாம் - ராசி

மனதில் இனம்புரியாத சிந்தனைகள் ஏற்பட்டு நீங்கும். உடனிருப்பவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். கல்வி சார்ந்த பணிகளில் சிறு சிறு காலதாமதம் ஏற்பட்டு நீங்கும். வியாபாரம் நிமிர்த்தமான முதலீடுகளில் கவனம் வேண்டும். திறமைகள் வெளிப்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.

சித்திரை : சிந்தனைகள் நீங்கும். 

சுவாதி : ஆசைகள் உண்டாகும்.

விசாகம் : கவனம் வேண்டும்.


விருச்சிகம் - ராசி

உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். விவசாய பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வழக்கு தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். தைரியம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு 

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்.

விசாகம் : பொறுப்புகள் குறையும்.

அனுஷம் : அலைச்சல்கள் உண்டாகும். 

கேட்டை : பொறுமையுடன் செயல்படவும்.


தனுசு - ராசி

மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எந்தவொரு செயலிலும் துணிச்சலுடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.

மூலம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும். 

பூராடம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

உத்திராடம் : பிரச்சனைகள் குறையும்.


மகரம் - ராசி

உறவினர்களின் வழியில் எதிர்பாராத உதவி கிடைக்கும். உத்வேகமான சிந்தனைகளின் மூலம் மாற்றத்தை உருவாக்குவீர்கள். சேமிப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். தாமதம் குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்.

உத்திராடம் : உதவி கிடைக்கும். 

திருவோணம் : வாய்ப்புகள் ஏற்படும்.

அவிட்டம் : ஆர்வம் அதிகரிக்கும்.


கும்பம் - ராசி

உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வெளிவட்டாரங்களில் தற்பெருமை சார்ந்த சிந்தனைகளை குறைத்துக் கொள்வது நல்லது. புதிய தொழில்நுட்பம் சார்ந்த தேடல் அதிகரிக்கும். ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். வியாபார பணிகளில் நிதானத்துடன் செயல்படவும். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.

அவிட்டம் : ஆதரவு கிடைக்கும்.

சதயம் : தேடல் அதிகரிக்கும்.

பூரட்டாதி : நிதானம் வேண்டும்.


மீனம் - ராசி

பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய சில விஷயங்கள் பல தடைகளுக்கு பின் நிறைவேறும். வியாபாரம் நிமிர்த்தமான முதலீடுகளில் கவனம் வேண்டும். சந்திராஷ்டமம் நடைபெறுவதால் நிதானம், கவனம், பொறுமை, மிக அவசியம். உத்தியோக பணிகளில் மறைமுக தடைகள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத அறிமுகத்தின் மூலம் புதிய கண்ணோட்டம் உண்டாகும். மகிழ்ச்சியான நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு 

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்.

பூரட்டாதி : விவாதங்களை தவிர்க்கவும்.

உத்திரட்டாதி : தடைகள் நீங்கும். 

ரேவதி : புதுமையான நாள்.

Read next: போரின் நீளத்தை யாராலும் கணிக்க முடியாது : ஜெலென்ஸ்கி