மானிப்பாயில் கோடாரிகள் வாள் என்பன மீட்பு!

Jan 25, 2022 02:40 pm

யாழ்.மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலக்காய் பிள்ளையார் கோவிலுக்கு பின்புறமாகவுள்ள காணி ஒன்றிலிருந்து வாள்கள், மற்றும் கோடரிகளை பொலிஸார் மீட்டிருக்கின்றனர்.

குறித்த காணியில் மிக இரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு 09.30 மணியளவில் மானிப்பாய் பொலிஸாரினால் குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் 2 கஜேந்திர கோடரிகள், நீளமான வாள் ஒன்றும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளபோதும், எவரும் கைது செய்யப்படவில்லை.

அது தொடர்பில் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

Read next: பொரிஸ் ஜோன்ஸன் விருந்துபசார விவகாரத்தை லண்டன் பொலிஸார் கையிலெடுத்துள்ளனர்.