உலகம் முழுவதும் 2 பில்லியன் அமெரிக்க டாலர் வசூலித்து சாதனை படைத்த அவதார் 2

Jan 23, 2023 10:01 pm

2009ம் ஆண்டில் அவதார் படம் திரைக்கு வந்தது. இந்த படம் உலக அளவில் பெரும் வசூலை குவித்து, அனைத்து படங்களின் சாதனைகளையும் முறியடித்தது. இதையடுத்து அவெஞ்சர்ஸ் எண்ட் கேம், அதையடுத்து ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் படங்கள் அதிக வசூலை குவித்த படங்களின் பட்டியலில் இடம்பெற்றிருந்தன. 

இந்நிலையில் அவதார் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த டிசம்பர் 16ம் தேதி திரைக்கு வந்தது.இந்த படம் உலகம் முழுவதும் 2 பில்லியன் வசூலை குவித்திருக்கிறது. அமெரிக்காவில் மட்டும் 572 மில்லியன் வசூலித்திருக்கிறது. அமெரிக்கா தவிர மற்ற உலக நாடுகளில் 1.35 பில்லியன் வரை வசூலித்து சாதித்துள்ளது. 

இந்த படம் ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் படத்தின் உலக அளவிலான வசூலை தாண்டியிருக்கிறது. இதன் மூலம் அவேஞ்சர்ஸ் வசூலையும் நெருங்கியுள்ளது. இந்தியாவில் இப்படம் ரூ.370 கோடியை ஈட்டியிருக்கிறது.

இந்தியாவில் சாதித்த ஹாலிவுட் படங்களிலே இந்த படம்தான் அதிகமாக வசூலித்திருக்கிறது. அவதார் 2 படம் வெற்றி பெற்றால்தான் அவதார் 3 மற்றும் 4 பாகங்களை எடுப்பேன் என இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் கூறியிருந்தார். இப்போது படம் பெரிய வெற்றியை தக்க வைத்திருக்கிறது. இதனால் 3வது மற்றும் 4வது பாகத்தை உருவாக்கும் பணியில் ஜேம்ஸ் கேமரூன் ஈடுபட்டுள்ளார்.

Read next: அமெரிக்காவில் பாடசாலை ஒன்றில் துப்பாக்கிச் சூடு - இருவர் பலி