கங்காருவால் கொல்லப்பட்ட அவுஸ்திரேலிய நபர்

Sep 13, 2022 07:19 am

செல்லப்பிராணியாக வளர்த்து வந்த கங்காருவின் தாக்குதலுக்கு ஆளான அவுஸ்திரேலிய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெர்த்தில் இருந்து தெற்கே 400 கிமீ (250 மைல்) தொலைவில் உள்ள ரெட்மண்டில் உள்ள அவரது வீட்டில் திங்களன்று 77 வயதான நபரை உறவினர் ஒருவர் பலத்த காயங்களுடன் மீட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு துணை மருத்துவர்கள் வந்தபோது, ​​கங்காரு அந்த நபருக்கு சிகிச்சை அளிக்க விடாமல் தடுத்தது.

இதனையடுத்து அதனை சுட்டுக் கொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அந்த நபர் கங்காருவால் தாக்கப்பட்டதாக நம்புவதாகத் பொலிஸ் செய்தித் தொடர்பாளர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

அவுஸ்திரேலியாவில் சுமார் 50 மில்லியன் கங்காருக்கள் உள்ளன, ஆனால் தாக்குதல்கள் அரிதானவை.

 1936-க்குப் பிறகு கங்காருவின் தாக்குதலுக்கு இலக்காகி ஏற்பட்ட முதல் மரணமாக இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

Read next: ராணியின் இறுதிச் சடங்கின் நாளில் எதிர்பார்க்கப்படுவது என்ன