அவுஸ்திரேலியாவில் நீண்ட நாள் போராட்டத்திற்குப் பிறகு வெற்றி பெற்ற இலங்கைத் தமிழர்கள்!

Jun 15, 2021 02:18 pm

அவுஸ்திரேலியாவில் கிறிஸ்மஸ் தீவில் தடுப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த இலங்கையர்களான பிரியா – நடேஷ் குடும்பத்தினரை குறித்த தடுப்பு முகாமிலிருந்து விடுவித்து, அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் தற்காலிகமாக வசிப்பதற்கு அனுமதிப்பதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது. 

இதையடுத்து, தற்போது கிறிஸ்மஸ் தீவிலுள்ள நடேசலிங்கம், மூத்த மகள் கோபிகா ஆகியோரும், தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இளைய மகள் தருணிக்கா, அவருடன் தங்கியுள்ள தாய் பிரியா ஆகியோருக்கு பேர்த் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

தருணிக்காவுடன், தாய் பிரியா வைத்தியசாலையில் தங்கியுள்ள நிலையில், தந்தை நடேசலிங்கமும் மூத்த மகள் கோபிகாவும் தொடர்ந்தும் கிறிஸ்மஸ்தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், தமது குடும்பத்தினரை ஒன்றிணைக்க உதவி புரியுமாறு பிரியா நடேஸ் வேண்டுகோள் விடுத்திருந்தார். 

இந்நிலையில், இக்குடும்பத்தினர் கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டு பேர்த் நகரில் தற்காலிகமாக வசிக்க அனுமதிக்கப்படுவதாக அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் அலெக்ஸ் ஹோக் இன்று அறிவித்தார். 

Read next: SLT-MOBITEL புத்தக நன்கொடை ஊடாக வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பு