சுமார் 100 ஆண்டுகளுக்குப்பிறகு அவுஸ்திரேலிய சனத்தொகையில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்!!

4 weeks

கடந்த ஒரு நூற்றாண்டுக்கு மோலான காலத்தில் அவுஸ்திரேலிய சனத்தொகையில் முதல் முறை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

கொரோனா தொற்றினால் எல்லைகள் மூடப்பட்டு வெளிநாட்டு குடியேறிகளின் வருகை தடைப்பட்ட நிலையில் இந்த புள்ளிவிபரம் வெளியாக உள்ளது.

கடந்த 2020 செப்டெம்பர் வரையான ஓர் ஆண்டில் நாட்டின் சனத்தொகை வளர்ச்சி ஒரு வீதத்திற்கும் குறைவாகவே இருந்துள்ளதாக அவுஸ்திரேலிய புள்ளிவிபர பணியகம் தெரிவித்துள்ளது.

“கடைசியாக 1916 டிசம்பர் வரையான அண்டில் முதலாம் உலகப் போரின் போதே சனத்தொகை வீழ்ச்சியை காணமுடிந்தது” என்று அந்தப் பணியகத்தின் சனத்தொகை பணிப்பாளர் பில் பிரவுனிங் தெரிவித்தார்.

கடந்த நூற்றாண்டுகளாக ஐரோப்பா, ஆசியா அதற்கு அப்பாலிருந்து படையெடுத்த பாரிய குடியெற்றங்கள் மற்றும் சுரங்கத் தொழில் மற்றும் விவசாயத்தினாலேயே அவுஸ்திரேலிய பொருளாதாரம் வளர்ச்சி கண்டுள்ளது.

உலகில் மிகப்பெரிய தீவாக இருந்தபோதும் 25.7 மில்லியன் மக்கள் தொகையை மாத்திரமே கொண்டிருக்கும் அவுஸ்திரேலியா, கொரோனா தொற்று ஆரம்பித்தபோது நாட்டு எல்லையை மூடி வெளி உலகுடனான தொடர்பை குறைத்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


Read next: இந்தியாவில் புதிதாக 39,726 பேருக்கு தொற்று உறுதி