நோவக் ஜோகோவிச்விடம் முதல் தோல்வியை கண்ட ஆஸ்திரேலியா

நோவக் ஜோகோவிச்க்கு எதிரான நாடு கடத்தல் தொடர்பான வழக்கை வரும் புதன் கிழமை வரை பிற்போடுவதற்கான விண்ணப்பத்தை அந்த வழக்கை மேற்பார்வை செய்யும் நீதிபதி நிராகரித்துள்ளார். இதன் காரணமாக வழக்கு திங்கள் காலை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தனது தற்போதைய சாம்பியன் பட்டத்தை தற்காத்துக்கொள்ளும் முகமாக பயணம் செய்ய திட்டமிட்டு இருந்தார். கடந்த வாரம் மெல்போனில் அவரது விமானம் தரை இறங்கியவுடன் நோவக் ஜோகோவிச் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
Photo: நோவக் ஜோகோவிச் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதிக்கு வெளியே அவருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபாடுள்ள ஆஸ்திரேலிய மக்கள்
அவரது வழக்கு உலகம் முழுவதும் பெரும் கவனத்தையும் கூக்குரலையும் ஈர்த்தது.
டென்னிஸ் உலக தரவரிசையில் நோவக் ஜோகோவிச் முதல் நிலையில் உள்ளார்-அதேவேளை அவர் தடுப்பு மருந்துக்கு எதிரான கொள்கையை கொண்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. தற்பொழுது அவரின் வழக்கை தற்பொழுது அவரது வழக்கறிஞர்கள் தயார் செய்துள்ளார்.
அண்மையில் அவர் கோவிட் தொற்றுக்குளான 34 வயதை உடைய நோவக் ஜோகோவிச்க்கு ஆஸ்திரேலியான் ஓபன் விளையாட்டு அமைப்பு மருத்துவ விதிவிலக்குவழங்கி இருந்தது. உலகில் மிகவும் கடுமையாக கோவிட் தொற்றுக்கு எதிராக கட்டுப்பாடுகளை விதித்துள்ள நாடுகளில் முதல் நிலையில் ஆஸ்திரேலியாவும் உள்ளது. இந்த காரணமாக ஆஸ்திரேலிய குடிமக்கள் கடுமையான கட்டுப்பாடுகள் மத்தியில் உறவினர்களை கூட பார்க்கமுடியாமல் வாழ்த்து வருகிறார்கள்.
இதேவேளை நோவக் ஜோகோவிச் அவர்கள் தனக்கு கோவிட் தொற்று ஏற்பட்ட காலப்பகுதியில் முகக்கவசம் அணியாமல் பல நிகழ்வுகளில் கலந்து கொண்டுரிந்த புகைப்படங்களும் வெளியாகி உள்ளது.
.@DjokerNole, the floor is yours
Read next: நீட் தேர்வை பா.ஜனதா ஆதரிப்பது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம்: கனிமொழி!