2024 ம் ஆண்டில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் தடகள வீரர்!

திருச்சி அருகே ஏழ்மை நிலையிலும் 2024 ம் ஆண்டில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் தடகள வீரர் டெனால்டு
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பாடி பேரூராட்சி பகுதியினைச் சேர்ந்த மகிமைராஜ் . ஏழை விவசாயியான இவருக்கு லீலாசகாயராஜ் என்ற மனைவியும், டெனால்டு என்ற மகனும், மரியசிந்தியா என்ற மகளும் உள்ளனர்.
டொனால்டு புள்ளம்பாடி அருகேயுள்ள டால்மியாபுரம் பகுதியில் உள்ள டால்மியா மேனிலைப் பள்ளியில் படித்து வந்தார்.
இவரது தந்தைக்கு போதிய வருவாய் இல்லாததால், டால்மியாபுரத்தில் உள்ள டொனால்டு மாமா சேவியர் வீட்டில் தான் இவரது தந்தை, தாய், அக்கா என அனைவரும் வசிக்கு வருகின்றனர்.
டொனால்டு கோயம்புத்தூர் பிஎஸ்ஜீ கலை அறிவியல் கல்லூரியில் பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு கல்வி பயின்று வருகிறார்.
பள்ளியில் படிக்கும் போதோ தடகள விளையாட்டில் ஆர்வம் உள்ள டொனால்டு.
கல்லூரியில் படிக்கும் நிலையில் இவரது தடகள விளையாட்டில் இவரது தனித்திறமையினை அறிந்த கல்லூரி நிர்வாகம், பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான 20 வயதிற்குட்பட்ட இளையோர் தடகள போட்டியில் பங்கேற்றார். இதில் 15. 76 மீட்டர் தூரம் தாண்டி முதலிடம் பிடித்து தங்கம் வென்று சாதனை படைத்தார்.
தங்கம் வென்று முதலிடத்தினைத் தொடர்ந்து, கென்யா நாட்டின் தலைநகரான நெய்ரோபி பகுதியில் இம்மாதம் ஆகஸ்ட் 17 ம் தேதி முதல் 22 ம் தேதி வரை நடைபெற்ற உலக அளவிலான இளையோர் தடகள போட்டியில் பங்கேற்று 15 .82 மீட்டர் தூரம் தாண்டி நான்காம் இடத்தினை பிடித்து தோல்வியுற்றார்.
இது குறித்து தடகள வீரர் டொனால்டு பெற்றோர் கூறியதாவது.
மிகவும் ஏழ்மையில் நிலையில் இருந்த போதும், படிப்பிலும், விளையாட்டிலும் சிறந்த மாணவனாக விளங்கி வருகிறார். தடகள போட்டியில் விளையாடுவதற்கான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் போதிய ஊட்டச்சத்து இல்லாத நிலையில் எனது மகன் கடந்த முறை தங்கம் வென்றுள்ளார்.
தற்போது விளையாடிய போது 3 மீட்டர் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார்.
ஏழ்மையில் நாங்கள் உள்ளதால், எனது மகன் டொனால்டுக்கு தேவையான விளையாட்டு உபகரணப் பொருட்களை வாங்கி கொடுக்க முடியவில்லை.
எனவே தமிழக அரசு எனது மகனுக்கு போதிய உதவி அளித்தால் வரும் 2024 ம் ஆண்டு நடைபெற்ற ஓலிம்பிக் போட்டியில் பங்கேற்று இந்தியாவுக்கு பதக்கம் பெற்று தருவான் என்றனர்.
Read next: நீண்ட நாட்களின் பின்னர் மதுரையில் நகர் பகுதியில் மழை பொதுமக்கள் மகிழ்ச்சி!