சிட்னியின் தெற்கு கடற்கரையில் மூன்று குழந்தைகள் உட்பட ஆறு பேர் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டதால் பதற்றம்

1 week

அவுஸ்திரேலியாவில் சிட்னியின் தெற்கே ஒரு பிரபலமான கடற்கரையில் மூன்று குழந்தைகள் உட்பட ஆறு பேர் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டதில் ஒரு நீச்சல் வீரர் இறந்துள்ளார்.

சனிக்கிழமை மாலை வொல்லொங்கொங் அருகே உள்ள வூனோனா கடற்கரையில் மூன்று குழந்தைகள் மற்றும் மூன்று பெரியவர்கள் கடலில் அடித்துச் செல்லப்பட்டனர்.

மாலை 5:40 மணியளவில் கடற்கரைக்கு அவசர சேவைகள் வரவழைக்கப்பட்டன, பார்வையாளர்கள் ஜெட் ஸ்கைஸ் மற்றும் சர்போர்டுகளைப் பயன்படுத்தி குழந்தைகளை மீண்டும் கரைக்கு அழைத்துச் சென்றனர்.

40 வயது இருப்பதாக நம்பப்படும் ஒரு நபர், மயக்கமடைந்து தண்ணீரிலிருந்து கரைக்கு எடுக்கப்பட்டு ஆபத்தான நிலையில் இருந்தார், அவரது உயிரைக் காப்பாற்ற துணை மருத்துவர்களும் பணிபுரிந்தனர்.

ஒரு மனிதன் இறந்துவிட்டதாக Nine News  வெளியிட்டன, ஆனால் இது மயக்கமடைந்த அதே மனிதனா அல்லது மற்ற இரண்டு பெரியவர்களில் ஒருவரா என்பது இன்னும் தெரியவில்லை.

லைஃப்சேவர் ஹெலிகாப்டர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு சர்ப் கிளப்பின் அருகே தரையிறக்கப்பட்டுள்ளது.

மீட்பு பணிகள் தொடாந்து நடைபெறுகின்றன.

Read next: பள்ளி நண்பன் கொரோனாவால் பாதிப்பு! கலிபோர்னியா ஆளுநரின் மகன் தனிமைப்படுத்தலில்