நடுக்கடலில் கவிழ்ந்த படகு! புலம்பெயர்ந்தோர் 11 பேர் பரிதாபமாக பலி

1 month

ஆப்பிரிக்காவின் பல நாடுகளை சேர்ந்த சிலர் படகு ஒன்றில் கடல்வழி பயணம் மேற்கொண்டுள்ளனர்.  

அவர்கள் சென்ற படகு துனிஷிய கடற்கரை பகுதியருகே ஸ்பாக்ஸ் நகரில் இருந்து சற்று தொலைவில் வந்தபோது திடீரென கடலில் கவிழ்ந்தது.

இதில் படகில் இருந்தவர்களில் பலர் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி தத்தளித்தனர். 

இதுபற்றி தகவல் அறிந்ததும் கடலோர காவல் படையினர் சம்பவ பகுதிக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களில் 11 பேரின் உடல்களை இதுவரை மீட்டுள்ளனர்.  அவர்களில் 2 பேர் குழந்தைகள் ஆவர். 

இது தவிர 7 பேரை மீட்பு குழுவினர் உயிருடன் மீட்டுள்ளனர்.  தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

Read next: மிக ஆபத்தான நேரத்தில் முக்கிய மூன்று நிலைகளை கையில் எடுக்கின்றார் போரிஸ் ஜான்சன்