துருக்கி அரசை விமர்சித்த ஓய்வுபெற்ற அட்மிரல்கள் 10 பேர் அதிரடியாக கைது

1 week

துருக்கி அரசை விமர்சித்த அந்நாட்டின் 10 ஓய்வுபெற்ற அட்மிரல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

100க்கும் அதிகமான கடற்படை அதிகாரிகள் கையெழுத்திட்டு வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், கடந்த கால இராணுவ சதிப்புரட்சிகளுடன் அரச அதிகாரிகள் பிணைக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டிருந்த நிலையிலேயே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில் அரசியலமைப்பு மற்றும் அரச பாதுகாப்பிற்கு எதிரான குற்றச்செயல் தொடர்பான சந்தேகத்திலான விசாரணையின் ஓர் அங்கமாகவே இந்த 10 பேரும் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் வயது மூப்பு காரணமாக மேலும் மூவர் கைது செய்யப்படாதபோதும் மூன்று நாட்களுக்குள் குறித்த நிர்வாகத்திடம் சமுகமளிக்கும்படி கோரப்பட்டுள்ளனர்.

மொத்த 103 அட்மிரல்கள் கையெழுத்திட்ட அறிக்கையில், போஸ்போரஸ் மற்றும் டார்டனெல்லஸ் நீரிணை ஊடான கப்பல் போக்குவரத்திற்கான சர்வதேச உடன்படிக்கையை கடைப்பிடிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

எனினும் போஸ்பொரஸிற்கு மாற்றாக ஸ்தன்பூலுக்கு வடக்காக சர்வதேச நிர் பாதை ஒன்றை அமைக்க துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான் திட்டமிட்டுள்ளார்.

துருக்கி அரசியல் 1960, 1971 மற்றும் 1980 மற்றும் 1997 ஆம் ஆண்டுகளில் இராணுவ தலையீடுகளை சந்தித்ததோடு 2016 ஆம் ஆண்டு தோல்வியுற்ற இராணுவ சதிப்புரட்சி முயற்சியில் 250 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

Read next: தாய்வானில் தடம் புரண்ட ரயில்! போக்குவரத்து அமைச்சர் பதவி விலகல்